Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் நடைபெறவுள்ள காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்றும்,
இந்தியாவில் தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்குபெறக்கூடாது என்றும் வலியுறுத்தி பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கையில் நடந்த இனப்படுகொலை, போர்குற்றங்கள் தொடர்பாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் குறிப்பாக தமிழ் நாட்டில் உள்ள மக்களின் உணர்வுகள் குறித்து, தங்களுக்கு ஏற்கனவே கடிதத்தில் கூறியுள்ளேன். இலங்கைத் தமிழர்கள் தங்களது சொந்த மண்ணில், இரண்டாம்தர மக்களாகவே இன்னும் நடத்தப்படுகிறார்கள். அங்கு இன்னும் தொடர்ந்து மனித உரிமைகள் மீறப்பட்டு வருகின்றன.

இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக ஒரு உறுதியான விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் செய்தவர்களை வெளியே கொண்டுவரவேண்டும். அமெரிக்க கொண்டுவந்துளள  தீர்மானத்தை ஆதரிப்பது மட்டுமல்லாமல் அந்த தீர்மானத்தில் முக்கியத் திருத்தங்களைக் கொண்டுவரவேண்டும் என்றும் கருத்து தெரிவித்து இருந்தேன்.

இந்நிலையில் இந்த ஆண்டு நவம்பர் 15 முதல், 17 வரை இலங்கை தலைநகர் கொழும்புவில் காமன் வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இலங்கையில் இனப்படுகொலையும் போற்குற்றமும், செய்துள்ள் குற்றவாளியான நாட்டில் சர்வதேச அளவிலான மாநாடு நடத்தப்படுவது அந்த நாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பது போலாகும். இந்த மாநாட்டை புறக்கணிக்க வேண்டும். கொழும்புவில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதன் மூலம் அந்த நாட்டில் நடந்த இனப்படுகொலையை சர்வதேச அளவில் எடுத்து சொல்லி அந்த நாட்டுக்கு நெருக்கடி கொடுக்க பிரதமருக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை இந்திய பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும்  ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதுமட்டுமின்றி ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க இருக்கும் இலங்கை நாட்டைச் சேர்ந்த நடுவர்களுக்கும் தடை விதிக்க பிசிசிஐ-க்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை அரசுக்கு எதிராக பல்வேறு கட்டங்களாக போராட்டங்கள் தமிழகத்தில் நடந்து வரும் நிலையில், வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்க இருக்கும் ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்றால் போட்டியை நடத்த விட மாட்டோம் என பல அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதனால் சென்னையில் நடக்கும் போட்டிகளை வேறு ஒரு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மற்ற அணி நிர்வாகங்கள் கேட்டுக் கொண்டன. இதை ஐ.பி.எல் நிர்வாகம் ஏற்க மறுத்துவிட்டது.

மேலும், சென்னையில் நடக்கும் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்காத படி பார்த்துக் கொள்ளுமாறு அணி நிர்வாகத்தை ஐ.பி.எல் நிர்வாகம் கேட்டுக் கொண்டது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அவசரமாக கூடி இது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அப்போது 2 இலங்கை வீரர்களான குலசேகரா மற்றும் அகிலா தனஞ்சயாவை இந்த தொடர் முழுவதும் நீக்க அணி நிர்வாகம் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. மேலும் தமிழக அரசின் ஒத்துழைப்பை பெறவும் இந்த நடவடிக்கையை அணி நிர்வாகம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

0 Responses to காமன்வெல்த் & ஐபிஎல் வீரர்களை புறக்கணிக்க : பிரதமருக்கு ஜெயலலிதா நேரடி கோரிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com