Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


தேனி அருகில் உள்ள ராஜதானியை சேர்ந்தவர் பாண்டி (வயது31). இவர் திருணமாகி விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார்.

இதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் மகளான 17 வயது பெண்ணை திருமணம் செய்வதற்கு பெண் கேட்டுள்ளார். அதற்கு பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தற்போது அங்கு கோவில் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவில் பெண்கள் முளைப்பாரி எடுத்து சென்றனர்.

திருவிழாவுக்கு வந்த அந்த 17 வயது பெண்ணுக்கு பாண்டி தாலி கட்ட முயன்றார். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார்.

அருகில் இருந்தவர்கள் பாண்டிக்கு தர்ம அடி கொடுத்தனர். ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியை தேடிவருகின்றனர்.

0 Responses to 17 வயது பெண்ணுக்கு தாலிகட்ட முயற்சி: வாலிபருக்கு தர்ம அடி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com