நீண்ட காலமாக நகர்ப்புற
குடிசைப் பகுதியில் வாழ்ந்துவந்த மக்கள் கட்டாய அப்புறப்படுத்தலால்
நகரத்துக்கு வெளியே இடம்பெயரும்போது, புதிய வாழ்க்கைச் சூழல் அவர்களுக்கு
குறிப்பாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எத்தகைய அனுபவங்களைக்
கொடுத்திருக்கிறது.
அவர்களின் பாதுகாப்பு எந்த அளவுக்கு உறுதி
செய்யப்பட்டிருக்கிறது என்கிற உண்மை நிலையை அறிவதற்கான ஓர் ஆய்வு
செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் மக்களிடம் தோழமை
அமைப்பின் மூலமாக மேற்கொள்ளப்பட்டது.
25.04.2013
அன்று சென்னையில் இந்த ஆய்வு அறிக்கையை மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த
தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஹெச்.ஜவாஹிருல்லா வெளியிட்டார்.
பெண்ணுரிமை செயல்பாட்டாளர் பேராசிரியர் சரசுவதி தலைமையில் நடந்த இந்த
நிகழ்ச்சியில், தோழமை அமைப்பின் இயக்குநர் அ.தேவநேயன், ஆக்ஷன் எய்டு மண்டல
மேலாளர் எஸ்தர் மரிய செல்வம், ஆக்ஷன் எய்டு திட்டமேலாளர் சுராஜித் நியோகி,
ஆக்ஷன் எய்டு மூத்த ஆலோசகர் மீனா ருக்மணி மேனன், பத்திரிகையாளர் கவின்மலர்
ஆகியோர் கருத்துரை மற்றும் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த ஆய்விற்கான ஆதரவை ஆக்ஷன் எய்டு எனும் சர்வதேச அமைப்பு வழங்கியது. இவ்வமைப்பு வெளியிட்டுள்ள நகரங்களும் நகர்புற வெளிகளும் பெண்களுக்கு அதிக பாதுகாப்பானவையாக உருவாக்குதல் எனும் கையேட்டின் வழிகாட்டுதலுடன் இவ்வாய்வு செயல்படுத்தப்பட்டது.
இந்த ஆய்விற்கான ஆதரவை ஆக்ஷன் எய்டு எனும் சர்வதேச அமைப்பு வழங்கியது. இவ்வமைப்பு வெளியிட்டுள்ள நகரங்களும் நகர்புற வெளிகளும் பெண்களுக்கு அதிக பாதுகாப்பானவையாக உருவாக்குதல் எனும் கையேட்டின் வழிகாட்டுதலுடன் இவ்வாய்வு செயல்படுத்தப்பட்டது.
சென்னையில்
இருந்து தொடங்கும் பழைய மாமல்லபுரம் சாலையில் 25வது கிலோ மீட்டர்
தூரத்தில் உள்ளது செம்மஞ்சேரி. இங்கு சுமார் 6,700 குடும்பங்கள் உள்ளன.
26,040க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 75 சதவீதத்திற்கு
மேற்பட்டவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர்.
செம்மஞ்சேரி,சென்னை
மாநகராட்சியின் 200வது வார்டாக இருந்தபோதிலும், அது காஞ்சிபுரம்
மாவட்டத்தில், தோமையார்மலை ஒன்றிய எல்லைக்குள் உள்ளது. ஆகவே இம்மக்கள்
அரசின் உதவிக்காக சென்னைக்கும், காஞ்சிபுரத்திற்குமாக பந்தாடப்படுகின்றனர்.
இந்த ஆய்வுக் குழுவினர் கண்டறியப்பட்ட பிரச்சனைகள்:
வீடுகளில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. வீட்டுக்குள் போதுமான இடவசதியில்லை. வாழ்வாதாரமின்மை. தெருவிளக்குகள், குடிநீர் வசதி, கழிவு நீர் வெளியேறுவதற்கான பாதாள சாக்கடை வசதியின்மை.
குடியிருப்பின் வாசலிலேயே மதுக்கடை அமைந்திருப்பது. குடும்ப வன்முறை. போதுமான போக்குவரத்து வசதியின்மை. போக்குவரத்து பயணத்தின்போது உடல், மன, பாலியல் ரீதியான வன்முறைகளை அனுபவித்தல். மருத்துவ வசதியின்மை. தேவையான ரேஷன் கடை இல்லாமை. அங்கு உணவு பொருட்கள் சரியாக விநியோகிக்கப்படாதது. மேல்நிலைப் பள்ளி, கல்லூரி வசதி இல்லை. பள்ளியில் இருந்து இடைவிலகல். சிறுவயது திருமணம்.
வீடுகளில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. வீட்டுக்குள் போதுமான இடவசதியில்லை. வாழ்வாதாரமின்மை. தெருவிளக்குகள், குடிநீர் வசதி, கழிவு நீர் வெளியேறுவதற்கான பாதாள சாக்கடை வசதியின்மை.
குடியிருப்பின் வாசலிலேயே மதுக்கடை அமைந்திருப்பது. குடும்ப வன்முறை. போதுமான போக்குவரத்து வசதியின்மை. போக்குவரத்து பயணத்தின்போது உடல், மன, பாலியல் ரீதியான வன்முறைகளை அனுபவித்தல். மருத்துவ வசதியின்மை. தேவையான ரேஷன் கடை இல்லாமை. அங்கு உணவு பொருட்கள் சரியாக விநியோகிக்கப்படாதது. மேல்நிலைப் பள்ளி, கல்லூரி வசதி இல்லை. பள்ளியில் இருந்து இடைவிலகல். சிறுவயது திருமணம்.
குழந்தைத் தொழில். ஆண்குழந்தைகளிடம் போதைப் பழக்கம். இரவு நேரங்களில்
தனித்து வாழும் பெண்களின் வீட்டுக் கதவுகளைத் தட்டி தொல்லை கொடுப்பது.
சிறுவயது பெண்குழந்தைகளிடம் பாலியல் துன்புறுத்தல். கலாச்சார சீரழிவு போன்ற
பிரச்சனைகள் செம்மஞ்சேரியில் இருப்பதாக கண்டறியப்பட்டன. இந்த பிரச்சனைகள்
எல்லாவற்றிலும் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் மற்றும்
குழந்தைகளே என்பதும் இக்குழுவால் கண்டறியப்பட்டன.
மேற்கண்ட
பிரச்சினைகளின் அடிப்படையில் பெண்ணுரிமை பாதுகாப்பாளர்க்கான அமைப்பினர்,
முக்கிய தகவலாளர்களிடம் நேர்காணல் செய்து அவர்களின் ஆலோசனைகளைப் பெற்றனர்.
மேலும், பாதுகாப்பு நடையின் மூலமாக பெண்கள் பயணத்தின்போது எதிர்கொள்ளும்
உடல், மனம், பாலியல் ரீதியான பிரச்சனைகள் உறுதி செய்யப்பட்டன என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மஞ்சேரியில் மேற்கொள்ளப்பட்ட பெண் பாதுகாப்புக்கான ஆய்வின் அடிப்படையில், அரசுக்கு சில பரிந்துரைகளையும் இந்த குழு வைத்துள்ளது.
1.
செம்மஞ்சேரியில் இருந்து வேலைக்குச் செல்லும் பெண்களும், பள்ளிக்குச்
செல்லும் குழந்தைகளும் ஒரே நேரத்தில் பேருந்துகளில் பயணம் செய்ய
வேண்டியிருப்பதால், அந்த நேரங்களில் போக்குவரத்து வசதியை அதிகப்படுத்த
வேண்டும். பெண்களும் குழந்தைகளும் நகரின் முக்கிய பகுதிகளுக்கு அச்சமின்றி
சென்றுவர அவர்களுக்கு சிறப்புப் பேருந்து வசதியை செய்து தர வேண்டும்.
2.
செம்மஞ்சேரி பகுதிக்குள் சாலை, தெருவிளக்கு, குடிநீர் ஆகிய அடிப்படை
வசதிகளை செய்து தரவேண்டும். மேல்நிலைத் தொட்டி, கழிவுநீர் குழாய்கள்
அமைக்கப்படவில்லை. இவற்றை உடனடியாக அமைத்து தரவேண்டும்.
3.
பெண்களும், குழந்தைகளும் பல்வேறு மனஅழுத்தங்களுக்கும்,
வன்முறைகளுக்கும்
உட்படுத்தப்படுவதால் அங்கு ஒரு கவுன்சிலிங் செய்பவர் அவசியம் இருக்க
வேண்டும்.
4.
தொண்டு நிறுவனங்களின் மூலம் பெண்களுக்கான உரிமைகளையும், சட்டப்
பாதுகாப்புகளையும் அவர்களுக்கு கற்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வழிவகை
செய்ய வேண்டும்.
5.
செம்மஞ்சேரிக்குள் சகல அடிப்படை வசதிகளையும் கொண்ட, பெண் குழந்தைகள்
சுதந்திரமாக அச்சமின்றி படிப்பதற்கான சூழுலைக்கொண்ட மேல்நிலைப் பள்ளி
அமைக்க வேண்டும்.
6. அனைவருக்கும் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை உறுதி செய்யப்படவேண்டும்.
7.
குடும்ப எண்ணிக்கைக்கு ஏற்ப ரேஷன் கடைகளை அதிகப்படுத்தி, ஒவ்வொரு
குடும்பத்திற்கும் மாதந்தோறும் கிடைக்க வேண்டிய பொருட்கள் அதே மாதத்தில்
கிடைக்க வழிவகை செய்யவேண்டும்.
8.
அனைத்து வசதிகளையும் கொண்ட அறுவைசிகிச்சை பிரிவுடன் கூடிய ஓர் அரசு
மருத்துவமனை வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார மையம் 24 மணி நேரமும் இயக்க
வேண்டும்.
9.
செம்மஞ்சேரி நுழைவு வாயிலில் மதுபானக்கடை உள்ளது. அதனால் பெண்களும்,
குழந்தைகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே, அதை உடனடியாக
அங்கிருந்து அகற்ற வேண்டும்.
10.
பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களின்
பிரச்சனைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அனைத்து மகளிர்
காவல்நிலையம் அமைக்க வேண்டும்.
11.
அங்கன்வாடிகள் 7 மட்டுமே இருக்கின்றன. குழந்தைகளின் எண்ணிக்கைக்குக்கேற்ப
குறைந்தபட்சம் 40 அங்கன்வாடிகளாவது அடிப்படை வசதிகளுடன் அமைத்துத்தர
வேண்டும்.
12. பெண்களுக்கு வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
13. சுயதொழில் செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
13. சுயதொழில் செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
பொதுவான பரிந்துரைகள்:
1.
மத்திய அரசின் ஆர்.ஆர்.சி. பாலிசியின் அடிப்படையில், கட்டாயமாக
அப்புறப்படுத்தப்படும் மக்களை 3 கிலோ மீட்டர் தொலைவுக்குள் குடியமர்த்த
வேண்டும்.
2.
சென்னையில் அப்புறப்படுத்தப்படுபவர்களில் 70 சதவீதத்தினர் த-த்துகள்.
ஆகவே, சென்னைப் பகுதியில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு அதனை த-த்
மக்களுக்குக் கொடுக்கலாம்.
3.
பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தி ஒரே இடத்தில்
குடியமர்த்தும்போது, ஒவ்வொரு பகுதி மக்களையும் தனித் தனி பிளாக்கில்
குடியமர்த்தினால் அவர்கள் தொடர்ந்து நட்புறவோடு வாழ வழிவகுக்கும்.
4.
அடிப்படை வசதிகளுடன் கூடிய குடியிருப்பினை குறைந்த பட்சம் 300 அடி அளவில்
கட்டித்தர வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில்
வீட்டின் அளவு அமைந்திருக்க வேண்டும்.
5. மறுகட்டமைப்பு செய்யப்படும் பகுதிக்கு ஒதுக்கும் நிதியை அதிகப்படுத்த வேண்டும்.
6.
இதுபோன்ற பிரச்சினைகளோடு வாழும் மக்களின் பிரச்சனைகளை ஊடகங்கள்
மினிதாபிமானத்தோடு அணுகவேண்டும். தவறாக சித்தரிப்பதை தவிர்க்க வேண்டும்.
7. குடியமர்த்தப்பட்ட பின், மக்கள் நலச் சங்கங்களை உருவாக்கி, குடியிருப்பு பராமரிப்பை அந்தச் சங்கத்திடமே ஒப்படைக்கவேண்டும்.
படங்கள்: ஸ்டாலின்
0 Responses to நகரங்களும், நகர்புற வெளிகளும் பெண்களுக்கு அதிக பாதுகாப்பானவையாக உருவாக்குதல்: ஆய்வு அறிக்கை வெளியீடு