ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானத்தை ஏற்றுக்கொள்ப் போவதில்லை
என்ற இலங்கையின் தீர்மானத்தில் மாற்றமில்லை என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்
தெரிவித்துள்ளார்.
இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்களை அரசாங்கம் ஏற்றக்கொள்ளாது. ஆறு மாதத்திற்கு ஒரு தடவை ஐக்கிய
நாடுகள் மனித உரிமைப் பேரவையில் விளக்கம் அளிக்கும் நடவடிக்கைகளை
ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கையை விடவும் உலகில் பாரியளவு பிரச்சினைகள்
ஏற்பட்ட நாடுகள் காணப்படகின்றன. அவை தொடர்பில் உலக நாடுகள் நடவடிக்கை
எடுக்கவில்லை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் அடிப்படையில் சர்வதேச சுயாதீன விசாரணைகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என அமைச்சர் பீரிஸ் நாடாளுமன்றில் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாடு ஆறு மாதத்திற்கு ஒரு தடவை நடைபெறுகின்றது. இந்த ஒவ்வொரு மாநாட்டிற்கும் அறிக்கை சமர்ப்பிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது. 30 ஆண்டுகளின் பின்னர் நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது. நல்லிணக்கத்தை ஏற்படுத்த உலக நாடுகளின் ஆலோசனை அவசியமில்லை. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மனிதஉரிமைப்பேரவை தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளமாட்டோம்! விடாப்பிடியாக நிற்கும் மகிந்த அரசு!!