இந்திய எல்லையில் சீன படையினரின் ஊடுறுவல் குறித்த விடயத்தில் இந்தியா துணிச்சலை கடைப்பிடிக்க வேண்டும் என பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய எல்லையான ஹிமாச்சல் பிரதேஷில், சீன ராணுவ வீரர்கள் சத்தமின்றி ஊடுருவி, தங்குவதற்கு டென்ட் கொட்டகைகளும் அமைத்து கொண்டுள்ளதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்திருந்தது.
எனினும், தாம் எல்லையை ஊடுறுவவில்லை எனவும் தமது இராணுவ படைகளை திரும்ப பெற முடியாது எனவும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருந்தார்.
இந்நிலையில் கருத்து தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி, எல்லை மீறிய சீன இராணுவத்தை வெளியேற்ற அனைத்து வகையான சமரச முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறியுள்ளார்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தும், சீன ராணுவத்தை வெளியேற்றுவதற்கான அனைத்து பேச்சுவார்த்தைகளும், சீன வெளியுறவுத் துறை அமைச்சரிடம் நடந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் கருத்து தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங் "சீன ராணுவத்தை வெளியேற்றும் முயற்சியில் இந்தியா துணிச்சலை கடைப்பிடிக்க வேண்டும். சீன, இந்திய எல்லையில் என்ன நடக்கிறது என்பதை அன்றாடம் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அறிக்கைகளை மத்திய அரசு வெளியிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
0 Responses to சீன படையினர் ஊடுறுவல் விடயத்தில் இந்தியா துணிச்சலைக் கடைப்பிடிக்க வேண்டும் : ராஜ்நாத் சிங்