Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொல்கத்தாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் கடந்த வாரம் கல்லூரிகளுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத் தேர்தலை, அரசு தாமதித்து வருவதை எதிர்த்து போராட்டம் நடத்தியிருதனர். அப்போது பல மாணவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர். அதில் சுதிப்தா குப்தா எனும் 22 வயதான பட்டதாரி மாணவரும் கைதானார். இவர் சிபிஎம் இன் மாணவர் அமைப்பின் (SFI) இன் தலைவர் ஆவார்.

போலீசார் விசாரணையில் இருந்த சுதிப்தா குப்தா திடீரென இறந்துவிட்டதாக தகவல் வெளியானது. எனினும் இது ஒரு விபத்து என காவல்துறையினர் கூறினர். கல்லூரி மாணவர்கள் அதை நம்பமறுத்ததுடன், கொந்தளிக்க தொடங்கினர்.

கொந்தளிப்பு நேற்று மாணவர்கள் போராட்டமாக வெடித்தது. இதை அடுத்து அங்கு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாணவர்களுக்கு ஆறுதல் சொல்ல போராட்டக் களத்துக்கு வருகை தந்தார். மாணர்வர்கள் மம்தாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதை அடுத்து பாதுகாப்பு கருதி உடனடியாக கிளம்பினார் மம்தா.

இந்நிலையில் இன்று மாணவர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, இன்றும் கொல்கத்தாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அங்கு மக்களின் இயல்பு வாழ்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கைது செய்து காவல்துறை வாகனத்தில் கொண்டு சென்ற போது, குறித்த மாணவர் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டிய படி சென்றதால் பாதை விளக்கு கம்பத்தில் மோதி விபத்தில் அவர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவருடைய பிரேத பரிசோதனையின் போது தலையில் இரு பக்கங்களில் பலமான தாக்கப்பட்டதற்காக காயங்கள் காணப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மருத்துவ சான்றிதழ்களின் படி இவர் அடித்துக்கொல்லப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகம் நிலவுகிறது.

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, மருத்துவமனைக்கு நேரடியாக சென்று மாணவன் மரணம் குறித்து விசாரித்ததுடன், இது துரதிஷ்டவசமான விபத்து, மாணவன் விளக்கு கம்பத்தில் தலை மோதி உயிரிழந்துவிட்டான்' என கூறியிருந்தார்.

எனினும் மாணவனின் உயிரிழப்புக்கு நீதி கோரி போராடும் மாணவர்களையோ, உயிரிழந்த மாணவனின் உறவினரையோ பார்க்க அவர் மறுத்துவிட்டார்.

0 Responses to கல்லூரி மாணவர் தலைவனின் மரணத்தில் சந்தேகம் - கொல்கத்தாவில் வலுப்பெறும் போராட்டங்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com