Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!

பதிந்தவர்: ஈழப்பிரியா 09 April 2013


வீர வேலன் எங்கள் தோழன்
ஊருக்கு நீ பாலகன்
வீரர்களுக்கு நீ மாவீரன்
கன்னி வெடிகளை தாண்டித்தாண்டி தான்
நீ நொண்டி விளையாடினாய்...

கையெறி குண்டுகளைத் தூக்கிவீசி
நீ பந்து விளையாடினாய்....
பதுங்கு குழிகளுக்குள் மறைந்து
கண்ணாமூச்சி விளையாடினாய்...

நீ விளையாடிய விளையாட்டையும்
கொரில்லா பயிற்சியாக ரசித்தார்
உம் தந்தை
உலகத் தமிழ்த் தந்தை...

கையில் கொடுத்த பிஸ்கட்டுகளையும்
நெஞ்சை துளைத்த குண்டுகளையும்
ஒன்றாகவே பார்த்த வீரன்...

வயிற்று பசிக்கு பிஸ்கட்டையும்
மார்பு பசிக்கு குண்டுகளையும்  உண்ட
வீரன்...
நீ!

பூக்களின் தேசத்தில் போர்க்களம்
புத்தன் கை பிடித்தே யுத்தம் செய்த
ஆரிய அரக்கன்...

புத்தமும் காந்தியமும்
கை கோர்த்தே பாலச்சந்திரனின்
'புன்னகையை' புதைகுழிக்குள்
தள்ளியது
வீரமும் ஈரமும் நிறைந்த இனத்தில்
துரோகமும் ஒன்றாகிப் போன
'விஷத்தின்' விரல் பிடித்தே
எங்கள் பாலகனின்
மார்பைத் துளைத்தாய்
கரிகாலன் பெற்றெடுத்த
மாவீரனின் மார்பை
'கரு'(னா)நாகத்தின் துணைகொண்டு
துளைத்தாய்
உன் மார்பில் துளைத்தது
தோட்டாக்கள் அல்ல
தமிழின துரோகத்தின் அடையாளம்...

ஊடுருவிக் கொன்ற துரோகத்தின்
தலையெடுக்கவே தகிக்கின்றது
மானமுள்ள தமிழர்களின்
கரங்கள்...
முடங்கி சுரணையற்றுக் கிடக்கும்
தமிழ் மூடர்களை முடுக்கிவிட்டுள்ளது 
உன் வீர மரணம்...
நீ பிணமல்ல...
சோம்பிக் கிடந்த தமிழர் இதயங்களை
எரியூட்டும் தீ!
நீ மூட்டிய தீயில் கருகிப் போவார்கள்
'கருணை' இல்லா குருடர்கள்
உன் சிதைக்கு மூட்டிய தீ
காற்றோடு காற்றாக
கடல் தாண்டிப் பரவட்டும்...
தமிழ் பேசும் நெஞ்சங்கள் எல்லாம்
சுவாசமாய் மாறட்டும்...
எம் மண்ணோடு கலந்துள்ளது
உன் வீர சாம்பல்...
அங்கே முளைக்கும் பயிரும் பாலகனும்
எங்கள் பாலச்சந்திரனாய்
பிறப்பான்...
ஆயிரமாயிரம் புதிய பாலச்சந்திரன்களாய்
பிறப்பான்...
அதுவரையிலும் உன் சாம்பல் பூசி
துரோகிகளின் தோலுரிக்க
எதிரிகளின் உயிரெடுக்க உலகமெங்கும்
துடித்துக் கொண்டுள்ளது ஈரமுள்ள
வீரமுள்ள நல்லோர் இதயங்கள்...
-சே.த.இளங்கோவன்

0 Responses to நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com