ஆந்திர பிரதேசத்தில், 22 வயதுடைய 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் பெண் பிள்ளையை வயிற்றில் சுமந்ததால், எச்.ஐ.வி பாஸிட்டிவ் இரத்த மாதிரியை அவரது உறவினர்கள் உட்செலுத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் குந்தூரில் உள்ள வேடுலப்பிள்ளை காவல்நிலையத்தில் இது தொடர்பில் புகார் அளித்துள்ளார்.
காம்பவுண்டரும் மற்றுமொரு உறவினருமான கே.நாகிரெட்டி என்பவரின் உதவியுடன், தனது மாமியார் இவ்வாறு எச்.ஐ.வி பாஸிட்டிவ் இரத்த மாதிரியை தனது உடலில் உட்செலுத்தியதாகவும் இதையடுத்து தனது எயிட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக காவல்துறையினர் அப்பெண்ணின் கணவர், மாமனார், மாமியார் மற்றும் மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
0 Responses to பெண் பிள்ளையை சுமந்ததால் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி இரத்தத்தை உட்செலுத்திய மாமியார்