Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


சர்வதேச அழுத்தங்கள் காரணமாக வட மாகாண சபைத் தேர்தல் நடத்துவதை சிறிலங்கா அரசாங்கம் தவிர்க்க முடியாது என  கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.வட மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்தக் கூடாது என அமைச்சர் வீரவங்ச தெரிவித்திருந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருப்பதாக அறிய வருகிறது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சர் வீரவங்ச போன்ற அடிப்படைவாதிகள் தெரிவிக்கும் கருத்துக்கள் குறித்து நாம் குழப்பமடைய தேவையில்லை.

சர்வதேச நாடுகளால் வட மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்துமாறு சிறிலங்காவிற்கு தொடர்ந்தும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.  இவ்வாறான அழுத்தங்களிலிருந்து தொடர்ந்தும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் தப்பித்துக் கொள்வதற்கு முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது போலவே தமிழமக்களுக்கான தீர்வினை வழங்குவதிலிருந்தும் சிறிலங்கா அரசு தப்பித்துக் கொள்ள முடியாது என அவர் கறிப்பிட்டதாகவும் தெரிய வருகிறது.

0 Responses to வட மாகாண சபைத் தேர்தல் நடத்துவதை சிறிலங்கா அரசாங்கம் தவிர்க்க முடியாது : இரா.சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com