பூரண
மதுவிலக்கு கோரி பொள்ளாச்சியிலிருந்து தொடங்கிய நடைபயணத்தின் 11ம் நாள்
வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் புதுவலசு என்னும் கிராமம் வழியாக
வரும்போது நடைபயணம் சென்றவர்களின் ஐந்தரை அடி நீளமுள்ள பச்சைப்பாம்பு
குறுக்கே வந்தது.
அப்போது
மறுமலர்ச்சி மாணவர் அணியைச் சேர்ந்த நந்தன் என்பவர் அந்தப் பாம்பைப்
பிடித்தார். அதன் வாயை அழுத்தியவுடன் சுழன்றது பாம்பு. பாம்பைப் பிடித்த
தொண்டர்கள் உற்சாகமாக இருந்தாலும், வைகோ மட்டும் பதற்றமாகவே இருந்தார்
அருகில் இருந்த மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அந்தப் பாம்பை
நந்தனிடமிருந்து வாங்கி, கழுத்துப்பகுதியைப் பிடித்து அரை கி.மீ. தூரம்
நடந்து வந்தார்.
பின்னர் பசுமையான காட்டுப்பகுதியை அடைந்தவுடன் வைகோ
அவரிடம் “ஒரு உயிரைக் கொல்வது சரியல்ல..” என்று கூறி காட்டுக்குள் விடச்
சொன்னார்.. பிறகென்ன? காட்டுக்குள் ஊர்ந்து சென்றது பாம்பு.
மனிதர்கள்
நடமாடும் பகுதிக்கு பாதை மாறி வந்த பாம்பின் பயணம் மதிமுகவினரால்
தடைபட்டாலும் அது நன்மையிலேயே முடிந்திருப்பது பாம்புக்கும்
மனிதகுலத்துக்கும் ஆறுதலானதுதான்.
-சி.என்.இராமகிருஷ்ணன்
வாழ்க வைகோ.