Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆழ் குழாய்  கிணற்றில் சிக்கி உயிரிழந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் அரவக்க்குறிச்சியை அடுத்த இனுங்கூர் கிராமத்தை சேர்ந்த விவசாயின் மகளான முத்துலட்சுமி என்பவர் அங்கு வயல் வெளியில் விளையாடிக்கொண்டிருந்த போது அங்கிருந்த ஆழ் குழாய் கிணற்றில் தவறி விழுந்தார். அச்சிறுமியை உயிருடன் மீட்க பெரும் போராட்டம் நடைபெற்றது. ஆழ் குழாய் கிணறு அமைந்துள்ள இடம் கடினமான பாறையாக இருந்ததால் மீட்பு நடவடிக்கைகளில் மிகவும் தொய்வு ஏற்பட்டது. ஆழ்குழாய்க்கு அருகில் 15 அடி ஆழத்துக்கு டிரில்லிங் இயந்திரங்கள் மூலம் குழி தோண்டப்பட்டு, இரவு 10.30 மணிக்கு அந்த சிறுமி மீட்கப்பட்டிருந்தார்.

உடனடியாக கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட அச்சிறுமி சிகிச்சை பலனின்றி 11.40 மணியளவில் உயிரிழந்தார்.  சுமார் 500 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டிருந்த குறித்த ஆழ் குழாய் கிணறு தண்ணீர்  வராததால் சாக்கால் பாதுகாப்பின்றி மூடப்பட்டு இருந்துள்ளதே இவ்விபத்துக்கு காரணமாக இருந்துள்ளது.

இதையடுத்து கிணற்றை மூடாமல் மிகவும் அஜாக்கிரதையாக இருந்த குற்றச்சாட்டின் கீழ் தோட்ட உரிமையாளர் சக்தி வேல் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

0 Responses to ஆழ் குழாய் கிணற்றில் வீழ்ந்து கடும் போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட சிறுமி மரணம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com