Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மத்திய அரசின் பயனாளிகளுக்கான நேரடி பணப்பயன் வழங்கும் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுத் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார் அதில், 'மத்திய அரசு நேரடியாக பயனாளிகளுக்கு பணப்பயன் வழங்கும் திட்டமான 'உங்கள் பணம் உங்கள் கையில்' திட்டத்தை தமிழகத்தில் 2ம் கட்டமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக அறிந்தேன். அரியலூர், புதுக்கோட்டை திருச்சி ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டம் வரும் ஜூலை முதல் செயல்படுத்த இருப்பதாக அறிந்தேன்.

பயனாளிகளுக்கான நேரடி பணப் பயன் திட்டம் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் செயல்பாடுகளில் குறுக்கிடுவதாகும். இது குடியாட்சித் தத்துவத்துக்கு முரணானது. இதன் மூலம் மாநில அரசுகளின் நிதி திட்டங்கள் மீது மத்திய அரசு தேவையின்றி தலையிடுவதாகவே தோன்றுகிறது.

இந்தியாவிலேயே மிகவும் திறமையான முன்னேற்றம் காணக்கூடிய மாநிலமான தமிழகத்தில் கல்வி உதவித் தொகை, பேறு கால  நிதி உதவிகள், சமூக நலத்திட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட பல துறைகளில் நேரடி மானிய  திட்டத்தை அமல் படுத்தி இருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசு, பயனாளிகளுக்கு நேரடியாக நிதி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது எங்களது செயல்பாட்டை குறைவு படுத்துவது  போலத் தோன்றுகிறது. எனவே இதுபோன்ற நேரடி மானிய திட்டத்தை தமிழகத்தில் மத்திய அரசு அமல்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.' என்று கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

0 Responses to மத்திய அரசின் நேரடி பணப்பயன் மானியத் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டேன்: ஜெயலலிதா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com