Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கு எதிராகவும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் தமிழ்த்திரையுலக நடிகர்கள் சார்பில் கடந்த செவ்வாய்க்கிழமை(02.04.13) உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், சூர்யா உட்பட பலர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.


இலங்கைக்கு எதிரான தீர்மானம் தமிழகத்தின் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையும், நடிகர்களின் உண்ணாவிரதத்தையும் அறிந்த இலங்கையின் மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா நடிகர்களின் உண்ணாவிரதத்தை கொச்சைப்படுத்தி பேட்டி அளித்துள்ளார். 

இது குறித்து பேசிய மெர்வின் சில்வா  “சிங்கத்தை சீண்டி தமிழகம் காயமடையப் போகிறது. தமிழகத்துடன் சிறந்த உறவுகள் காணப்படுவதுடன், சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் ஆற்றல் ஜனாதிபதிக்கு இருக்கிறது. எனினும், உறங்கும் சிங்கத்தை எழுப்பி காயமடைய வேண்டாம்.

இலங்கைக்கு எதிராக தமிழக திரைநட்சத்திரங்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். மெய்யான நாயகர்களாக இருந்தால் சாகும் வரையில் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும். இடைநடுவில் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டிருக்காது” என்று  கூறியிருக்கிறார்.

0 Responses to நடிகர்கள் உண்ணாவிரதத்தை கொச்சைப்படுத்திய இலங்கை அமைச்சர்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com