தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடாத்தக்கோரியும், 65 ஆண்டுகால இன அழிப்பிற்கு நீதி வழங்கும் வகையில் ஐ.நா. சர்வதேசசுயாதீன விசாரணையை நடாத்த வலியுறுத்தியும், இன்று லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம் பேரணி இடம்பெற்றது.
பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இவ் ஆர்ப்பாட்டப் போரணி இன்று பி.ப 2:30 மணிக்கு ரவல்கர் சதுக்கத்தில் இருந்து புறப்பட்டு பிரித்தானியப் பிரதமரின் வாசஸ்தலம் முன்பாக ஆர்ப்பாட்டத்தோடு பி.ப 4:00 மணிக்கு நிறைவடைந்தது. இப் பேரணியில் கலந்துகொண்ட்அ மக்கள் முன்னிலையில் தென்னிந்திய தமிழ் திரைப்பட இயக்குனரும், தமிழீழ ஆதரவாளருமான பாரதிராஜா அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அதில்… லண்டனின் வரலாற்றுப் புகழ் மிக்க மாபெரும் சதுக்கத்தில் இவ்வாறானதொரு ஈழத் தமிழர்களின் போராட்ட நிகழ்வில் பங்கேற்பதில்பாவப்பட்ட பாரதிராஜாவாகிய நானும் மகிழ்ச்சியடைகின்றேன்.
இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்டதானது திட்டமிட்ட இனப்படுகொலை. அந்த மாபெரும் இனப்படுகொலையைச் செய்தபாதகனை உலகின் நீதிமன்றின் முன் நிறுத்த வேண்டும்.
எமக்கு தமிழீழம் நிச்சயம் கிடைக்கும். அது உறுதி. தமிழகத்தில் எழுந்துள்ள மாணவர் போராட்டங்களையும், அதனை தொடர்ந்து நடாதிக்கொண்டிருக்கும் மாணவச் செல்வங்களையும் நாங்கள் பாராட்ட வேண்டும்.
இந்தப் பேரெழுச்சி தாமதமானதாக இருந்தாலும் வரவேற்கத்தக்கது.
பிரித்தானியாவில் வாழும் உங்களுக்கு மட்டுமல்ல உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் ஒன்றை கூற விரும்புகின்றேன்.
தமிழர்களாகிய நாங்கள் எந்த நாடுகளில் வாழ்ந்தாலும் பேதம் பார்க்காமல் எல்லாத் தமிழ் மக்களும் ஒன்றாகச் சேர்ந்து தமிழீழத்துக்காகப்போராட வேண்டும். இனி ஒருபோதும் ஈழத் தமிழர், தமிழகத் தமிழர், இந்தியத்தமிழர், கனடாத் தமிழர், அவுஸ்திரேலியாத் தமிழர்,மலேசியாத் தமிழர் என பிரித்துப் பார்க்க வேண்டாம்,
நாம் எல்லோரும் ஓர் குடும்பம். எமக்குள் ஆயிரம் பிரச்சனைகள், கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். ஆனால் தமிழர்களை தாக்க, தமிழர்களை அழிக்க, தமிழர்களை ஏமாற்ற யாரும் வருவார்களாக இருந்தால் அந்த கயவர்களுக்கு எதிராக, அந்த எதிரிக்கு எதிராக நாம் எல்லோரும் தமிழர்கள் என்ற ஒற்றைக் குடையின் கீழ் ஒன்றுபட்டு போராட வேண்டும். அப்போதுதான் தமிழர்கள் தலைனிமிர்ந்து வாழலாம் என்றார்.
ஆர்ப்பாட்ட பேரணியின் இறுதியில் பிரித்தானியப் பிரதமரின் (10 Downing Street) வாசஸ்தலம் முன்பாக இனப்படுகொல்ஐயாளியான இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் உருவப் பொம்மையும், சிறீலங்கா கொடியும் எரிக்கப்பட்டது.

















0 Responses to லண்டனில் இன்று நடைபெற்ற எழுச்சிப் பேரணியில் பல்லாயிரக்கனக்கான மக்கள் பங்கேற்பு