Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


கடந்த மார்ச் 26 இரவு சேலம் பள்ளப்பட்டி ஆலமரத்துகாடு பகுதியில் லட்சுமி அபார்ட்மெண்ட்டில் குடியிருந்து வந்த சாந்தி என்ற 40 வயது மதிக்கத்தக்க பெண்மணி கழுத்து அறுபட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டு இருந்தார்.

இவர் ஜாகீர்ரெட்டிப்பட்டியை சேர்ந்த சுப்ரமணியனை திருமணம் செய்து பிரிந்தவர்.  பின் பள்ளப்பட்டியை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவருடன் கடந்த 10 வருடமாக குடும்பம் நடத்தி வந்துள்ள நிலையில் தான் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் முரளி மற்றும் விஜயகுமார் ஆகிய இருவரை கைது செய்தது பள்ளப்பட்டி காவல்நிலையம். இந்த கொலை குறித்து அவர்கள் கூறியது :

'சாந்தி விபசார தொழில் செய்து வந்தவர்....அவரின் தொழில் போட்டி காரணமாகவோ அல்லது குடும்பம் நடத்தி வந்தவரோ கொலை செய்து இருக்கலாம் என பல்வேறு விதத்தில் விசாரித்தோம்.   பின் இவரின் கஸ்டமர்கள் கொலை செய்து இருக்கலாம் என விசாரித்தோம்.   அதன் பின் அது உண்மையானது.  இவரிடம் கஸ்டமராக வந்த முரளியும்,விஜயகுமாரும் தான் கொலை செய்துள்ளனர்.

1000 ரூபாய் எடுத்து வந்து அனுபவிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.  இரண்டு பேர் என்றால் மேலும் 1000 ரூபாய் வேண்டும் என சாந்தி கேட்க உன் உடம்புக்கு இது போதும் என இவர்கள் கூற இதில் வாக்குவாதம் ஆகி பின் கொலையில் முடிந்துள்ளது....'என்றவர்கள் முரளியும்,விஜயகுமாரும் கொடுத்த வாக்குமூலத்தின் சாரத்தை கூறினர்.

'அவர் வீட்டிலிருந்த கத்தியை எடுத்தே,ஒருவர் பின் பக்கமாக இருந்து சாந்தி வாயை பொத்தி பிடித்துக்கொள்ள மற்றொருவர் அவரின் கழுத்தை அறுத்து கொன்றுள்ளனர். பின் அந்த ரத்த கறை யையும்,கை ரேகை அடையாளங்களையும் அழித்துள்ளனர். பல சினிமாவில் இது போன்ற காட்சிகள் வந்ததால் இவ்வாறு செய்ததாக கூறினர்.

பின் தப்பித்து திருப்பூர் சென்றுவிட,  காவல்துறை விஞ்ஞான முறையில் இவர்களை கைது செய்தோம்' என்றனர்.

பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நம்மிடம் 'வாழ வேண்டிய வயதில் தங்கள் எதிர்காலத்தை இவர்கள் கெடுத்துகொண்டனர்.  இப்பொழுதும் ஒன்றுமில்லை சிறையை தங்கள் தவறை உணர்த்த போகும் ஒரு பள்ளிக்கூடமாக கருதி மனம் திருந்த வேண்டும்' என்றார் பொறுப்பாக.
- இளங்கோவன்

 

0 Responses to சினிமா பார்த்து கொலை செய்தோம்: சாந்தி கொலையாளிகள் வாக்குமூலம் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com