Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அண்மையில் நடந்த கடலூர் கூட்டத்தில்  யாசின் மாலிக்கை பேசவைத்த விவகாரம் சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில் இது குறித்த ராம கோபாலனின் கருத்துக்கு பதில் அறிக்கை  அளித்துள்ளார் சீமான்.

கடலூரில் நான் தமிழர் கட்சி நடத்திய தமிழர் எழுச்சிக் கூட்டத்தில் காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் கலந்து கொண்டு பேசியதை கண்டித்து இந்து முன்னணி  தலைவர் ராம கோபாலன் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்தியாவின் ஒற்றுமைக்காக குரல் கொடுக்கும் நீங்கள், காவிரியிலும், முல்லைப் பெரியாறு அணையிலும், கர்நாடக, கேரளா அரசுகள் தமிழ்நாட்டின் உரிமையை மறுத்தபோது, எதிர்த்து குரல் கொடுத்தீர்களா?தமிழ் நாட்டில் இருந்து கேரளத்தில் இருக்கும் ஐயப்பன் கோயிலுக்கு சென்ற சாந்தவேலு என்கிற பக்தர், கொதி நீரைக் கொட்டி கொல்லப்பட்டாரே அதனைக் கண்டித்து கோபாலன் ஒரு அறிக்கையை விட்டதுண்டா?

இன்றைய உலகில் தமிழ் இனத்துக்காகவும் மக்களின் உரிமைக்காகவும், போராடும் தலைவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தும் ஒரு ஆட்சி, சர்வதேச அளவில் இருக்கிறது. ஆனால் பயங்கரவாதி யார், விடுதலைப் போராளி யார் என்பதை நமக்கு பின் வரும் சந்ததியினர்தான் முடிவு செய்வார்கள் என்று சீமான் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

0 Responses to யாசின் மாலிக் விவகாரம் : ராமகோபாலனுக்கு சீமான் பதில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com