சிறிலங்காவின் புகழ்மிக்க பௌத்த தலங்களில் ஒன்றான கண்டி தலதா மாளிகைக்கு முன் பௌத்த பிக்கு ஒருவர் தீ குளித்துள்ளார்.
புத்தர் ஞானம் பெற்ற தினமாக இன்று கொண்டாடப்படும், வெசாக் தின விசேட மத நிகழ்வுகள் தலதாமாளிகையினுள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தன் மீது பெற்றோலை ஊற்றிக் கொண்ட பிக்கு தீயைப் பற்றவைத்துக் கொண்டதாகவும், இதனைக் கண்ட பொதுமக்கள் பிக்குவை உடனடியாகப் பிடித்து தீயை அணைத்து, கண்டி வைத்தியசாலையில் அனுமதித்தனர் எனவும், கடுமையான தீக்காயங்களுக்குள்ளான பிக்கு அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மிருகவதையைத் தடுக்ககுமாறும், குறிப்பாக மாடுகள் கொல்லப்படுவதற்கு எதிராகவே அவர் இத் தீக்குளிப்பினை நிகழ்த்தியதாகவும் முதற் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Responses to கண்டி தலதாமாளிகை முன் பௌத்த பிக்கு தீக்குளிப்பு!