நான் சோனியா காந்தி போன்று மென்மையானவன் இல்லை, காங்கிரஸில் எவர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டாலும் தன்னை பொறுத்துக்கொள்ள முடியாது என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கட்சிப்பிரதிநிதிகளை இன்று டெல்லியில் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதோடு உட்கட்சி பேதங்களை மறந்து காங்கிரஸின் அனைத்து உறுப்பினர்களும் எதிர்வரும் தேர்தலுக்காக ஒற்றுமையாக பாடுபடவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் மற்றும் டெல்லி காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜே.பி.அகர்வால் இடையே அண்மைக்காலமாக முறுகல் நிலை நீடிப்பதாக எழுந்த குற்றச்சாட்டு எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதோடு எதிர்வரும் மாநிலத்தேர்தல்களில் காங்கிரஸ் வெல்வதை உறுதிப்படுத்துமாறும் அவர் கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தை அடுத்து டெல்லி முதல்வர் ஷீலா தீக்க்ஷித் கருத்து தெரிவிக்கையில், ராகுல் காந்தியின் பேச்சு நம்பிக்கைகுரியதாக அமைந்துள்ளது. நாம் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை ஒருகுடையின் கீழ் எதிர்கொள்வோம் என்றார். அகர்வாலும் இதே கருத்துக்களை கூறியுள்ளார்.
0 Responses to நான் சோனியா போன்று மென்மையானவன் அல்ல : ராகுல் காந்தி