தருமபுரியில் திவ்யாவை
காதல் திருமணம் செய்த இளவரசன் வியாழக்கிழமை தர்மபுரி அரசு கலைக்கல்லூரி
பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தின் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இந்த
சம்பவம் சோகத்தையும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இளவரசன் சட்டை பையில்
இருந்து 2 காதல் கடிதங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த 2 கடிதங்கள்
2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் இளவரசனும், திவ்யாவும் எழுதிக்கொண்டது.
இந்த கடிதம் ஒன்றில் இளவரசன் கூறி இருப்பதாவது:-
2010-ல்
திவ்யாவை நான் முதன்முதலில் சந்தித்தேன். பின்னர் அவர் ஐலவ்யூ கூறினார்.
ஜனவரி 1-ம்தேதி நானும், திவ்யாவும் வெளியில் போனோம். இந்த நாளை என்
வாழ்க்கையில் மறக்க முடியாது.
பிறகு
சினிமாவிற்கு போனோம். அப்போது முதன்முதலில் திவ்யாவை முத்தமிட்டேன்.
திவ்யாவின் அண்ணனுக்கு நாங்கள் வெளியில் சென்று வருவது தெரியவந்தது. இதனால்
எங்களை அவர் சத்தமிட்டார். இதனால் நாங்கள் வெளியில் செல்லவில்லை.
எங்கும்
சேர்ந்து போகாமல் இருந்து வந்தோம். பிறகு திவ்யா செல்போனில் பேசினார்.
பின்னர் மீண்டும் பேச தொடங்கினோம். சில நாளில் நாங்கள் இருவரும் கோவிலுக்கு
சென்று தாலி கட்டிக் கொண்டோம்.
இதன்
பின்னர் நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்று அவரது வீட்டில் மதியம் 1 மணி
முதல் மாலை வரை ஒன்றாக இருந்தோம். பின்னர் வீட்டிற்கு திரும்பி விட்டோம்.
எங்கள் காதல் ஊராருக்கு தெரிந்து எதிர்ப்பு அதிகமானது. இவ்வாறு அவர்
கடிதத்தில் கூறி உள்ளார்.
இந்த கடிதத்தில் உள்ள கையெழுத்தும், இளவரசனின் கையெழுத்தும் ஒன்றா என்றும் விசாரணை நடந்து வருகிறது.
இளவரசனின்
ஊரில் தகராறு ஏற்பட்டதில் இருந்து இளவரசன் சோகமாக இருந்து வந்துள்ளார்.
எப்போதும் திவ்யா நினைவாக, திவ்யா எழுதிய காதல் கடிதங்களை சட்டைப்பையில்
வைத்து இருந்து வந்துள்ளார். அடிக்கடி இந்த கடிதங்களை அவர் எடுத்து
பார்த்தும் வந்துள்ளார்.
சில
நாட்களுக்கு முன்பு திவ்யா அவரை விட்டு பிரிந்து சென்றதில் இருந்து
இளவரசன் இந்த காதல் கடிதங்களையும், திவ்யா கொடுத்த நினைவு பரிசுகளையும்
எடுத்து பார்த்து வந்துள்ளார். இதுபற்றி இளவரசனின் நண்பர்கள் உறவினர்களிடம்
கூறி கண்ணீர் விட்டு அழுதனர்.
இளவரசன்
இறந்து கிடந்த போது அவரது சட்டைப் பையில் 2 கடிதம் இருந்தது. இதில் ஒரு
கடிதம் இளவரசன் திவ்யாவிற்கு எழுதியது. மற்றொரு கடிதம் திவ்யா இளவரசனுக்கு
எழுதியது. இந்த கடிதம் 2 பக்கத்தில் இருந்தது. இந்த கடிதத்தை திவ்யா
ஆங்கிலத்தில் எழுதி உள்ளார்.
இந்த
கடிதம் 2011-ம் ஆண்டு எழுதி உள்ளார். இதில் திவ்யாவும், இளவரசனும் பழகி
கொண்டது பற்றியும், இளவரசன் எப்படி இருக்க வேண்டும் என்றும் திவ்யா கூறி
உள்ளார்.
இந்த
கடிதம் திவ்யா எழுதியது தானா? என்றும் விசாரணை நடந்து வருகிறது. இந்த
கடிதத்தில் வேறு என்ன எழுதி உள்ளது என போலீசாரிடம் கேட்டதற்கு கடிதம்
விவகாரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இதன் விவரங்களை தெரிவிக்க இயலாது என
தெரிவித்தனர்.
0 Responses to 2010-ல் திவ்யாவை முதன்முதலில் சந்தித்தேன். `ஐ லவ் யூ' சொன்ன நாளை மறக்க முடியாது! இளவரசன் கடிதம்!