உணர்வுப் பூக்கள் தூவுவோம்.
புலம்பெயர்ந்து யேர்மனிய மண்ணில் வாழும் ஈழத்தமிழ் உறவுகளின் போராட்ட விருட்சத்தின் ஒரு தளிர், எம்மிடமிருந்து தன்னை இன்றோடு விலக்கியிருக்கிறது. யேர்மனியின், ஹம் நகரத்தில் வாழ்விடத்தைக் கொண்டு தமிழீழ விடுதலைக்காய்த் தன்னை முற்றுமுழுதாக அர்ப்பணித்துத் திறம்படச் செயற்பட்டு வந்த ஈகைத்தீபம் திருமதி. பரமேஸ்வரி கந்தராசா அவர்கள் சாவடைந்த செய்தி எம்மை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியிருக்கிறது.
யேர்மனியத் தமிழீழ மக்களின் போராட்டச் செயற்பாடுகளில் தன்னை முற்று முழுதாக ஈடுபடுத்திக்கொண்டு, தனது உயிர் பிரியும் காலம் வரை விடுதலைக்காகக் கடுமையாக உழைத்த தாயுள்ளம் அவருடையது.
தமிழ்க்கல்விக்கழகம்,தமிழ்ப்பெண்கள் அமைப்பு, ஆகியவற்றில் நீண்ட காலமாக இணைந்து செயற்பட்டு வந்ததோடு மட்டுமன்றி, தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அனைத்துச் செயற்பாடுகளிலும் முன்னின்று உழைத்ததோடு, ஒரு வழிகாட்டியாகவும், தகுந்த வேளைகளில், சிறந்த நடத்துனராகவும் இயங்கியவர் ஈகைத்தீபம் திருமதி பரமேஸ்வரி கந்தராசா அவர்கள்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

தனது இறுதிக்காலம் வரையிலும் உறுதி
தளராது, தமிழீழத் தேசியத் தலைவரின் வழியில் நின்று செயற்பட்ட இவ்வாறானதொரு
தாய்மை உள்ளத்தை வணங்கிப் பூசிக்கும் அதேவேளையில், அவரது பிரிவால்
துயருறும் அவர்தம் கணவருக்கும், அவரது பிள்ளைகட்கும் உறவினர்களுக்கும்
நாம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். எந்த மூச்சுடனும்
உறுதியுடனும் விடுதலை நோக்கி அவர் பயணித்தாரோ , அதே வழியில் நாமும்
தொடர்ந்து பயணிப் போம் என, அவர்தம் நினைவுகளோடு உறுதியெடுத்துக்கொள்வோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
யேர்மனிக்கிளை
இறுதி நிகழ்வு இடம்பெறும் விபரம்.
நாள்: 1.7.2013
நேரம்: 10.30 இல் இருந்து 14.30 வரை
இடம்: Trauerhalle Birkenallee, Birkenallee 3, 59071 Hamm

0 Responses to அகவணக்கம் - ஈகைத்தீபம் - திருமதி.பரமேஸ்வரி கந்தராசா