தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக இலங்கை அரசுக்கு தேவையான அனைத்து நவீன ஆயுதங்களையும் வழங்கினோம் என பாகிஸ்தான் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி அஷ்பாக் பர்வேஸ் கயானி தியத்தலாவை இராணுவ முகாமில் நடைபெற்ற இராணுவ வீரர்களின் பயிற்சி நிறைவு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் விடுதலைப்புலிகளை அழிப்பதற்காக இலங்கை அரசுக்கு தேவையான அனைத்து ஆயுத உதவிகளையும் நாம் வழங்கினோம். 2009 ஆம் ஆண்டுடன் இலங்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு தற்போது சமாதானம் நிலவுகின்றது. இலங்கையைப் போன்றே பாகிஸ்தானும் அமைதியை விரும்பும் ஒரு நாடு.
அந்தவகையில் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேலும் வளர்த்தெடுக்கும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.
0 Responses to விடுதலைப் புலிகளை அழிக்க உதவினோம்! பாகிஸ்தான் இராணுவ தளபதி வாக்குமூலம்!!