வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும். இல்லாத பட்சத்தில் தான் தீக்குளிக்கப்போவதாக யாழ் மாநக சபையின் முன்னாள் உறுப்பினராக சிறிகரன் நிஷாந்தன் மிரட்டல் அறிவித்தல் விடுத்துள்ளார்.
வடக்கு மாகாண சபை தேர்தல்களுக்கான ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பணிப்புரை இன்றைக்கு விடுக்கப்பட்டுள்ள நிலையில், யாழ் மாநக சபையின் முன்னாள் உறுப்பினராக சிறிகரன் நிஷாந்தன் அறிக்கையொன்றை இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார்.
ஆயுங்கள் தூக்காமல் அரசியல் ரீதியிலான அஹிம்சைப் போராட்டங்களில் கலந்து கொண்ட நீண்ட அனுபவமும், தூரநோக்குச் சிந்தனை, பேச்சாற்றல், செயற்திறன் கொண்ட அரசியல் ஆளுமையாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்கள் திகழ்கிறார். வடக்கு மாகாண சபைக்கான தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சராக போட்டியிடுவதற்கு அவரே பொருத்தமானவர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தவில்லை என்றால், தான் தீக்குளிக்கவும் தயக்க மாட்டேன் என்றும் சிறிகரன் நிஷாந்தனின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Responses to வடக்கு முதல்வர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவே நிறுத்தப்பட வேண்டும்; முன்னாள் உறுப்பினர் மிரட்டல்