நாட்டிலுள்ள அனைவருக்கும் சட்டம் பொதுவானது. தங்களது சொந்த தேவைகளுக்காக சட்டத்தை கையிலெடுக்க முடியாது.
அப்படி சட்டத்தை கையாள நினைப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டில் எல்லோருமே சமமானவர்கள். எந்தவொரு மதமோ, இனமோ ஒன்றுக்கொன்று தாழ்ந்ததோ உயர்ந்ததோ அல்ல. அதுபோல, நாட்டுக்கு அச்சுறுத்தலாக யார் அமைந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அந்த விடயத்தில் அரசாங்கம் பின் நிற்காது. எனவே, நாட்டு மக்கள் யாரும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பேருவளையில் புதிதாக அமைக்கப்பட்ட சீனாவத்தை ஜூம்மா பள்ளிவாசலை இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாம் எல்லோருமே இலங்கையர்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அதுவே எமது ஒருமைப்பாட்டுக்கும் அபிவிருத்திக்கும் தேவையானது என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Responses to சட்டத்தை கையிலெடுப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - ராஜபக்ஷ