Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த்திரையுலகின் முன்னணி திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான ராசு மதுரவன், புற்றுநோயால் இன்று காலமானார்.

மறைந்த இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, பூமகள் ஊர்வலம் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு இயக்குனராக அறிமுகமானார் ராது மதுரவன். தொடர்ந்து அவர் எடுத்த கிராமத்து கதைப்பின்னணி கொண்ட திரைப்படங்களான மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக என்பன தமிழ்த்திரையுலகில் சத்தமில்லாமல் வெற்றிப்படங்கள ஆகியிருந்தன.  இறுதியாக அவர் சொகுசு பேருந்து எனும் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதுடன், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு திரையுலகினர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த வருடத்தில் திரையுலகம் ஏராளமான கலைஞர்களை இழந்துள்ளது. பாடகர் சௌந்தர்ராஜன், இயக்குனர் மணிவண்ணன்,  இயக்குனர் ரிது பர்னொ கோஷ், பழம்பெரும் நடிகை ராஜ சுலோசனா என நீளும் பட்டியலில் தற்போது ராசு மதுவரனும் இணைந்துள்ளார்.

0 Responses to தமிழ்த் திரைப்பட இயக்குனர் ராசு மதுவரன் காலமானார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com