தமிழிழன துரோகியான விவேகானந்தா நிகழ்வில் கலந்துகொள்ள அவுஸ்ரேலியா செல்லவுள்ள நிலையில் அதற்கான எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம் தமிழினத்திற்கும் தேசியத்திற்கும் இழுக்கை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் மனிதன் அவரின் அரசியல் ஈழத்தமிழினத்தை அழித்து ஒழிப்பது என்பதை அடிப்படையாக கொண்டது என்று இயக்குனர் புகழேந்தி தங்கராச தெரிவித்துள்ளார்.
விவேகானந்தர் நிகழ்விற்கு அவுஸ்ரேலியா செல்லவுள்ளார் என்பதை கேள்வியுற்று அதிர்ச்சி அடைந்துள்ளோம் அவர் விபுலானந்தரின் நிகழ்வில் கலந்துகொள்ள என்ன அதிகாரம் உள்ளது. தாயகத்தில் மட்டக்களப்பில் விவேகானந்தரின் சிலை சிங்கள பேரினா வாதிகளால் 2009 ற்கு பிறகு நொருக்கப்பட்டது இதனை ஒட்டுமொத்த தமிழினமும் கண்டித்தது இந்த சுப்பிரமணிய சாமி ஒரு முணுமுணுப்பு கூட விடுக்கவில்லை அடிப்படையில் சுப்பிரமணியம் சுவாமி ஹிந்துத்துவா அடிப்படையாக கொண்டவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று மகிந்தவின்ஏயன்ட்டாக மாறி இருக்கின்றார் உண்மையின் உறைவிடமாக இருக்கின்ற விவேகானந்தரின் நிகழ்வில் இந்த புல்லுருவியை அனுமதிப்பது நமக்கு நாமே கொள்ளிவைப்பதற்கு சமம் எனவே அவுஸ்ரேலியாவிற்கு செல்லும் சுப்பிரமணிய சுவாமியின் பயணத்தினை தடுப்பதன் மூலம் அந்நாட்டு அரசிற்கு நமது உணர்வுகளை உண்மையாக சொல்வதன் மூலம் உலகம் முழுக்க இருக்கின்ற தமிழ்மக்களின் ஒற்றுமையினை வெளிப்படுத்த வேண்டும் எனவே அவுஸ்ரேலியாவில் இருக்கின்ற தமிழர்கள் களங்காண வேண்டும் அந்நாட்டு அரசிற்கு உண்மையான உணர்வுளை எடுத்து செல்ல தவறகூடாது அந்த செய்திக்காக நாம் காத்திருக்கின்றோம் என்றும் இயக்குனர் புகழேந்தி தங்கராசா தெரிவித்துள்ளார்.
0 Responses to தமிழின துரோகி சுப்பிரமணியசுவாமி அவுஸ்ரேலியா பயணத்திற்கு எதிர்ப்பு!