Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களை இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசியது.

கிளிநொச்சியிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது

பிரித்தானியாவின் தொழிற்கட்சி மற்றும் பழைமைவாத கட்சிகளைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளனர்.  அவர்களுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சிறீதரன் ஆகியோருக்குமிடையிலேயே இன்றைய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மோதல்களுக்குப் பின்னரான அரசியல் கள நிலவரங்கள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் குறித்த சந்திப்பின் போது உரையாடப்பட்டதாகத் தெரிகிறது.

 இதனிடையே, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தங்களது பயணத்தை இன்று மேற்கொண்டுள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, இறுதி மோதல்கள் களமான முள்ளிவாய்க்காலையும் பார்வையிடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்து பேசியது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com