Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லெபனானை ஆக்கிரமித்திருக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்தைத் தீவிரவாத அமைப்பாக சமீபத்தில் ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பு ஏற்கனவே அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் தடை செய்யப் பட்டிருந்ததுடன் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 28 நாடுகளின் நிதியமைச்சர்கள் பங்கேற்ற மாதாந்தக் கூட்டத்தில் திங்கட்கிழமை இப்புதிய தடை உத்தரவு அறிவிக்கப் பட்டுள்ளது.

இத்தடையுத்தரவு காரணமாக ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகளுக்கு ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்ய விசா வழங்கப் படாது என்பதுடன் இவ்வமைப்புடன் தொடர்புடையவர்களின் சொத்துக்கள் முடக்கப் படும். லெபனானில் அந்நாட்டு அரச இராணுவத்துக்கு இணையான படை பலத்தைக் ஹிஸ்புல்லா கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவ்வமைப்புடன் தொடர்புடையவர்களைக் கண்டு பிடிப்பது மிகச்சிரமம் எனக் கருதப் படுகின்றது.ச் மேலும் இந்த அமைப்பு சிரிய யுத்தத்தில் சிரிய அரசு சார்பாகப் போரிட்டு வருகின்றது.

இதேவேளை இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் சரியான முறையில் முடிவுகள் எடுக்க முடியாமல் தடுமாற்றத்துடனும் ஐரோப்பிய யூனியன் இந்த முடிவை எடுத்துள்ளது என ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் இப்பிராந்தியத்தில் யூதர்களின் ஆளுமையை அதிகரிப்பதற்கான முயற்சி இதுவெனவும் ஈரான் தெரிவித்துள்ளது.

0 Responses to ஹிஸ்புல்லாவை தீவிரவாத அமைப்பாக அறிவித்தது ஐரோப்பிய யூனியன்:ஈரான் கண்டனம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com