Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”





வடக்கு மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்துமா இல்லையா என்கிற சந்தேகம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.

அதனால், இலங்கையின் மீது பல் முனை அச்சுறுத்தல்களை இந்தியா தொடர்ந்தும் விடுத்து வருகின்றது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இலங்கை மீது இந்தியா திணித்த 13வது திருத்த சட்டத்தில் மாற்றங்களைக் செய்ய அரசாங்கம் எடுத்த முயற்சிகள் எதுவும் இந்தியாவுக்கு பிடிக்கவில்லை. வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் வரையில் இந்தியா தன்னுடைய அழுத்தங்களை நிறுத்தப்போவதில்லை. அதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்கிறது என்று அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார தெரிவித்தார்.

வடக்கிலுள்ள இராணுவத்தினை ஒட்டுமொத்தமாக முகாம்களுக்குள் முடக்கும் முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்கிறது. அதற்கான அழுத்தங்களையும்- அச்சுறுத்தலையும் இலங்கையிடம் விடுக்கிறது. இது, எமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்றார்

13வது திருத்த சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதைத் தடுக்கும் முகமாக, இலங்கைக்கும்- இந்தியாவுக்கும் இடையில் இருக்கிற ‘கச்சதீவு கையளிப்பு’ ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்கும் வகையிலான வழக்கொன்றை தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியைக் கொண்டு இந்திய மத்திய அரசு தொடுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

0 Responses to இலங்கையை அச்சுறுத்தும் முயற்சிகளில் இந்தியா ஈடுபடுகிறது: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com