மிகவும் நயவஞ்சகமான முறையில் தமிழரை இழிவு படுத்தும் நோக்குடன்
எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் மட்றாஸ் கபே என்று இயக்குநர் ஆர்.கே.
செல்வமணி, சீமான் இருவரும் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் ஓர் இடத்தில்கூட சிங்கள இராணுவம் படுகொலை செய்ததாகக் காட்டவில்லை, உண்மையை அப்பட்டமாக மூடி மறைக்கிறது.
மறுபுறம் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாகக் காட்டும் கபட நோக்கத்திற்காக முதலீடு செய்யப்பட்டுள்ளமை படத்தைப் பார்க்க தெரிகிறது.
மகிந்த ராஜபக்ஷ முதலீடு செய்து, இந்திய உளவுப்பிரிவான றோ கதை வசனம் எழுதி, சோனியா காந்தி இயக்கியிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது படம் என்கிறார் செல்வமணி.
திரைப்படத்தை வெளியிடுவது தமிழருக்கும் நல்லதில்லை, ஜான் ஆபிரகாமிற்கும் நல்லதில்லை, மொத்தத்தில் யாருக்குமே நல்லதில்லை என்று சீமான் கூறினார்.
மாணவர் அமைப்பினர் கூறும்போது இப்படத்தை தமிழகத்தில் மட்டுமல்ல வேறு எந்த மாநிலங்களிலும் காண்பிக்க இயலாது என்றுள்ளனர்.
கருத்துச் சுதந்திரம் முக்கியம்தான் அதற்காக பொய்யை திரைப்படமாகக் காட்ட அனுமதிக்க இயலாது என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்தப் படத்தில் ஒரு நன்மையும் இருக்கிறது, இலங்கையில் நடக்கும் அத்தனை அவலங்களுக்கும் இந்தியாவின் கொள்கை வகுப்பே காரணம் என்ற செய்திதான் அதுவென்றும் செல்வமணி கூறினார்.
தமிழ் உணர்வாளரும், பல தலைவர்களும் இப்படம் வெளிவரக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.
படம் 23ம் திகதி திரைக்கு வருமா இல்லையா… பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
ஆனால் இந்திய அரசின் உதவியுடன் செயற்படுவதால் படத்தை எப்படியாவது காண்பித்துவிடலாம் என்ற துணிச்சலுடன் பேசுகின்றனர் வெளியீட்டாளர்.
தலைவா படத்தின் பின் மெட்றாஸ் கபே ஆடுகளம் வந்துள்ளது.

0 Responses to மட்றாஸ் கபே: தயாரிப்பு மகிந்த, கதை வசனம் றோ, இயக்கம் சோனியா