சமீபத்தில் ஐ.நா அகதிகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் லெபனானில் தஞ்சமடைந்திருக்கும் சிரிய அகதிகளின் எண்ணிக்கை 8 இலட்சத்தை அண்மித்திருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த அகதிகளில் சுமார் 713 000 பேர் உத்தியோக பூர்வமாகப் பதிவு செய்யப் பட்டுள்ளனர் என்பதுடன் இன்னமும் 87 000 பேர் தமது பதிவினை மேற்கொள்வதற்கு காத்துக் கொண்டு இருக்கின்றனர் என்றும் ஐ.நா உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கான சிரிய அகதிகள் எல்லையைக் கடந்து லெபனானுக்கு வந்த வண்ணம் உள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. இதேவேளை லெபனானுக்கு இடம்பெயர்ந்த சிரிய அகதிகள் மத்தியில் மார்ச் 2011 முதல் இதுவரை 8000 குழந்தைகள் பிறந்திருப்பதாகவும் இக்குழந்தைகளில் அதிகமானோர் தமக்கு முறையான அடையாள அட்டைகள் கூட இல்லாமல் சிரமப் பட்டு வருவதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2 வருடங்களுக்கு மேலாக நிகழும் சிரிய யுத்தத்தில் மிக அதிகளவான அகதிகள் இடம் பெயர்ந்த நாடாக விளங்கும் லெபனான் தனது நாட்டிற்கு வந்து சேரும் சிரிய அகதிகளைச் சமாளிக்க முடியாமல் சர்வதேச சமூகத்தின் உதவிக்கு விண்ணப்பித்து வருகின்றது.

0 Responses to லெபனானில் தஞ்சமடைந்து வரும் சிரிய அகதிகளின் எண்ணிக்க 8 இலட்சத்தைத் தாண்டியது