Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகள் சிரிய அதிபர் அசாத்தின் ஆதரவாளர்களால் திங்கட்கிழமை பல மணி நேரங்களுக்கு முடக்கப் பட்டிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இக்கணக்குகளுக்கான இணையத் தளத்துக்கு கிளிக் செய்த போது சிரியாவின் மின்னணு இராணுவம் என்ற தளம் திறக்கப் படுவதுடன் ஒபாமாவின் பிரச்சார இணைப்புக்கள் முடக்கப் எம்மால் முடக்கப் பட்டுள்ளன என்ற அறிவிப்பும் அதில் வெளியிடப் பட்டிருந்தது.

இவ்விடயம் தொடர்பில் CNN Money என்ற தளத்துக்கு சிரியாவின் எலெக்ட்ரானிக் ஆர்மி விடுத்த அறிவிப்பில் இந்த ஹேக்கிங் நடவடிக்கைக்கு தாம் பொறுப்பேற்பதாகக் கூறியுள்ளது. அதிபர் ஒபாமாவின் @BarackObama எனும் டுவிட்டர் கணக்கு அவரின் கட்டளைகளைச் செயற்படுத்தும் அமைப்பால் இயக்கப் பட்டு வருகின்றது. மேலும் சிரிய விஷமிகளால் சில மணி நேரங்களுக்கு ஒபாமாவின் டுவிட்டர், ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கப் பட்டிருந்தன என்பதை வெள்ளை மாளிகை அதிகாரிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர். இவர்கள் இது தொடர்பில் கூறும் போது ஒபாமாவின் இக் கணக்குகள் முடக்கப் பட்ட போதும் சிரிய விஷமிகளின் கட்டுப்பாட்டுக்கு அவை செல்லவில்லை. தற்போது இவற்றை மீட்கும் நடவடிக்கை இடம்பெறுகின்றது எனத் தெரிவித்தனர்.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்கவின் பிரபல நாளிதழ்களான நியூயோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் ஆகியவற்றின் இணையத் தளங்களும் சிரிய விஷமிகளால் முடக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஒபாமாவின் டுவிட்டர் ஃபேஸ்புக் கணக்குகள் பல மணி நேரம் முடக்கம்:சிரிய அரசு மீது சந்தேகம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com