இலங்கை மீதான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர்
நாயகம் கமலேஷ் சர்மாவிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையொன்று இணையத்தில் கசித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சர்ச்சைகள் எழுத்துள்ளது.
இலங்கையின் பிரதம நீதியரசரான ஷிராணி பண்டாரநாயக்க கடந்த ஆண்டு அரசியல் ரீதியிலான குற்றச்சாட்டுக்கள் (impeachment) சுமத்தப்பட்டு பாராளுமன்றத்தினால் பதவி நீக்கப்பட்டமை தொடர்பிலேயே இணையத்தில் கசிந்துள்ள அந்த அறிக்கை கருத்துக்களை முன்வைத்துள்ளது.
ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கப்பட்டது, இலங்கையின் அரசியலமைப்புக்கு எதிரானது மற்றும் பொதுநலவாயத்தின் விழுமியங்களுக்கு முரணானது என்று பொதுநலவாயத்தின் சட்ட கருத்துரையாளரான பிரித்தானியாவைச் சேர்ந்த சட்டத்தரணி ஜியாப்ரி ஜோவல், அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவிடம் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
ஆனாலும், குறித்த அறிக்கைகளில் என்ன விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் கமலேஷ் சர்மா உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அறிவிக்கவில்லை. அறிக்கையையும் மறைத்துவிட்டார் என்று குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே எழுந்திருந்தது. இந்த நிலையிலேயே அந்த அறிக்கை இணையத்தில் கசித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் பி.பி.சி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ள பொதுநலவாயத்தின் தகவல் தொடர்பாளரான ரிச்சர்ட் உக்கு, பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகத்துக்கு மட்டுமேயான அறிக்கை அது. அதனை ஏனைய நாடுகளின் தலைவர்களுக்கு காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இணையத்தில் கசிந்துள்ள அறிக்கை தொடர்பில் தன்னால் கருத்து தெரிவிக்க முடியாது. ஏனெனில், பொதுநலவாயத்தின் நடவடிக்கைகள் அமைதியான இராஜதந்திர முனைப்புக்களைக் கொண்டது என்றார்.
கருத்து சுதந்திரமும், மனித உரிமைகளும் ஒரே இரவில் கட்டியெழுப்ப கூடியன அல்ல. அவை, மெல்ல மெல்ல கட்டியெழுப்ப வேண்டிய விடயம். அதையே இலங்கையிலும், ஏனைய நாடுகளிலும் பொதுநலவாயம் பிரயோகிக்கிறது என்று ரிச்சர்ட் உக்கு மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இலங்கை அரசாங்கத்தின் அத்துமீறல்களை மூடிமறைத்து இலங்கைக்கு ஆதரவான முடிவுகளை பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தொடர்ந்தும் எடுத்து வருவதாக கனடா உள்ளிட்ட சில நாடுகளும், சர்வதேச அமைப்புக்களும் ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to பொதுநலவாயத்தின் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கையை குற்றஞ்சாட்டும் அறிக்கை கசிந்தது