வடக்கினில் எச்.ஜ.வி தொற்று மிகவேகமாக அதிகரித்து வருவது ஆய்வுகளினில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக யுத்தத்தின் பின்னராக வடக்கு நோக்கி பயணித்த தெற்கு சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை ஒரு கோடியினை தாண்டியுள்ளது.இவர்களை விட பெருமளவிலான சிங்கள தொழிலாளர்கள் வீதி கட்டிட நிர்மாண வேலைகளிற்காகவும் அதே போன்று ரயில்வே பாதையமைப்புள்ளிட்ட புனரமைப்பு வேலைகளிற்காகவும் வடக்கினில் தங்கியிருக்கின்றனர். இத்தகைய சூழலினிலேயே அண்மைய மருத்துவ ஆய்வொன்றினில் வடக்கினில் எச்.ஜ.வி தொற்று மிகவேகமாக அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக வடக்கினில் வந்து தங்கியிருப்பவர்களே இதன் பிரதான காவிகளாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையினில் அவசர நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேணடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும் இலங்கை அரசோ இந்த விடயத்தினில் அக்கறையற்றிருப்பதாகவும் தொடர்புடைய தரப்புக்கள் கூறுகின்றன. அதிலும் கூடுதலாக படையினரது தேவைக்காகவென தெற்கிலிருந்து பெருமளவிலான பெண்கள் தருவிக்கப்படுகின்ற நிலையினில் பின்னர் நோய்க்காவிகள் உள்ளுரினில் பரப்பப்படுவதாக கண்டறியப்பட்டுமுள்ளது.

0 Responses to வடக்கினில் அதிகரித்து வரும் எச்.ஜ.வி தொற்று!