Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாணத்தில் இராணுவ தலையீடுகள் அகற்றப்பட வேண்டும். குறிப்பாக, மக்களின் பகுதிக்குள் இராணுவம் சீருடையுடன் நடமாடுவது அச்சுறுத்தலானது என்று தேசிய மொழிகள் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாட்டின் எந்தப் பகுதியிலும் வசிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால், அரசாங்கத்தின் தலையீட்டுடன் வடக்கில் பெருந்தொகையில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதையோ அல்லது தெற்கில் தமிழ் மக்கள் குடியேற்றப்படுவதையோ ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அதை எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கிலுள்ள இராணுவத்தினர் அவர்களின் இடங்களுக்குள் இருக்க வேண்டும். அத்­தோடு, சிவில் சமூக நிர்வாகத்தில் இரா­ணுவத்தினரின் தலை­யீட்டை இல்­லாது செய்ய வேண்டும். தேசிய பாது­காப்பை கருத்திற் கொண்டு இராணுவத்தின் உளவுப்பிரிவு நடமாடுவது தப்பல்ல. ஆனால், இராணுவ சீருடையுடன் மக்கள் மத்தியில் நடமாடுவது அச்சமூட்டக்கூடியது. அது, மக்களை இராணுவ மயமாக்கலுக்குள் சிக்கியிருப்பதாக உணர வைக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அர­சாங்கம் வடக்கிற்கு ஜன­நா­ய­கத்தை வழங்­கி­யுள்­ளது. அதனை சுவா­சிக்க மக்­க­ளுக்கு இட­ம­ளிக்­கப்­பட வேண்டும் என்று வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to வடக்கில் இராணுவ தலையீடுகள் அகற்றப்பட வேண்டும்: வாசுதேவ நாணயக்கார

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com