Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாத்தளை மாவட்டம் தம்புள்ளை நகரத்துக்குள் அமைந்திருந்த மகா பத்திரகாளியம்மன் ஆலயம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முற்றாக இடித்து அழிக்கப்பட்டுள்ளதாக அங்கு வாழும் இந்து மக்கள் தெரிவித்துள்ளனர்.

கண்டி- யாழ் இணைப்பு வழியான ஏ- 9 வீதியில் பல வருடங்களாக அமைந்திருந்த குறித்த ஆலயம், தம்புள்ளை நகர எல்லைக்குள் இருந்த ஒரேயொரு இந்து ஆலயமாகும். அந்தப் பகுதிகளில் வசித்து வரும் தமிழ்- இந்துக்கள் அந்த ஆலயத்தையே தமது பிரதானமாக வழிபாட்டு ஸ்தலமாக கொண்டிருந்தனர்.

தம்புள்ளை நகரத்தை பௌத்த புனித பூமியாக நகர அபிவிருத்தி அமைச்சு அண்மைக்காலத்தில் பிரகடனப்படுத்தியது. அதனையடுத்து, அந்த எல்லைக்குள் வரும் பௌத்த மதம் தவிர்ந்த ஏனைய மத வழிபாட்டு இடங்களை அகற்றுவதற்கான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டிருந்தன. அத்தோடு, குறித்த அம்மன் ஆலயத்தை சூழ குடியிருந்த தமிழ் மக்களும் அங்கிருந்து பலவந்தமாக அகற்றப்பட்டிருந்தனர்.

மகா பத்திரகாளியம்மன் ஆலயத்தினை அகற்றுமாறு தம்புள்ளை பௌத்த விகாரையின் பிரதம பிக்குவினால் ஆலய பரிபாலகர்களுக்கு அழுத்தங்களும், நெருக்குதல்களும் இருந்ததாக அங்கு வாழும் தமிழர்கள் தெரிவித்துள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே, ஆலயத்தை வேறு இடத்தில் அமைப்பதற்கு பொருத்தமான காணியை வழங்குமாறு மத விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சரும், பிரதமருமான டி.எம் ஜயரத்ன மற்றும் காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் உள்ளிட்டோரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதும், அதற்கு சாதகமான பதில்கள் கிடைக்கவில்லை என்று பிரதேச இந்துக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையிலேயே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஆலயம் முற்றாக இடித்து அழிக்கப்பட்டுள்ளது.

0 Responses to தம்புள்ளை பத்திரகாளியம்மன் ஆலயம் முற்றாக இடித்து அழிப்பு: இந்துக்கள் கவலை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com