Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

1986ம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தானுடனான போட்டியில் இந்திய வீரகளுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்று, நிழல் உலக தாதா தாவூத்  இப்ரஹீம், அப்போதைய கேப்டன் வெங்சர்க்காரிடம் பேரம் பேசியதாக வெங் சர்க்கார் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

போட்டிக்கு முன்பாக வெங்சர்கார் ஓய்வு அறைக்கே நிழல் உலக தாதா தாவூத் சென்று, இந்திய வீரர்களுக்கு விலை உயர்ந்த கார் பரிசாக வழங்கப்படும் என்றும், மேலும், வீட்டுக்கு வீரர்கள் எடுத்து செல்ல வேண்டிய ரிஸ்க் கூட இல்லை, நாங்களே வீட்டில் நிறுத்தி விடுகிறோம் என்றும்,

தாவூத் பேரம்  பேசியதாகவும்,அப்போது உடன் இருந்த கபில்  தேவ், தாவூத்தை வெளியே செல்லும் படி கூறியதாகவும் இத்தனை ஆண்டுகள் கழித்து வெங் சர்கார் கூறியுள்ளார். ஆனால், இது சர்ச்சையை கிளப்பிய அடுத்த சில மணி நேரங்களிலேயே, தாம் அப்படி சொல்லவில்லை என்றும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் 1986ம் ஆண்டு போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்தால் பரிசு வழங்க முன்வந்ததாகவும் அல்லது பாகிஸ்தானுடன் இந்தியா தோற்றுப் போவதற்க்காக பரிசு வழங்க முன்வந்ததாகவும் இரு விதமாக செய்திகள் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

1986ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் ஷார்ஜா கோப்பை இறுதி ஆட்டத்தின் கடைசி பந்தில், பாகிஸ்தான் வீரர் ஜாவித் மியான்தத் சிக்ஸர் அடித்து அந்த அணியை வெற்றி பெற வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to 1986இல் இந்திய வீரர்களுக்கு கார் பரிசு வழங்க முன்வந்த தாவூத் இப்ராகிம்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com