Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று தான் அவருக்கு எழுதிய கடிதத்தின் எந்தவொரு பகுதியிலும் குறிப்பிடவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் என்கிற முறையில் இந்தியா வழங்கி வரும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்துத் தனிப்பட்ட கடிதமொன்றையே இந்தியப் பிரதமருக்கு அனுப்பியிருந்தேன். அத்தோடு, இலங்கை வரும் சமயத்தில் வடக்கு மாகாணத்திற்கும் விஜயம் செய்து நேரடியாக நிலைமைகளை அவதானிக்க வேண்டும் என்று கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்தேன். மற்றப்படி பொதுநலவாய மாநாடு பற்றி குறிப்பிடவே இல்லை என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் ‘தி ஹிந்து’ பத்திரிகை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளதாக நேற்று புதன்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது. அது, தவறான செய்தி என சுட்டிக்காட்டியே வடக்கு முதலமைச்சரினால் இன்று வியாழக்கிழமை அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

0 Responses to பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்தியப் பிரதமரை அழைக்கவில்லை: சி.வி.விக்னேஸ்வரன் விளக்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com