Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆண்டு தோறும் உலகின் செல்வாக்கு மிகுந்த தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு வரும் நியூயோர்க்கின் போர்ப்ஸ் பத்திரிகை அண்மையில் 2013 ஆம் ஆண்டிற்கான செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலை வெளியிட்டது.

இதில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை 2 ஆம் இடத்துக்குத் தள்ளி விட்டு ரஷ்ய அதிபர் புட்டின் முதல் இடத்தைப் பிடித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இப் பட்டியலில் கடந்த 3 வருடங்களாக அமெரிக்க அதிபர் ஒபாமாவே முதலிடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிரியா மீது அமெரிக்கா தொடுக்க இருந்த போரைத் தடுத்து நிறுத்தியது, ரஷ்ய அதிபராகப் 13 வருடங்கள் நிறைவு செய்தது, 2012 மார்ச் தேர்தலில் மறுபடி வெற்றி பெற்றது ஆகிய காரணிகளுடன் அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி அதன் உளவுத்துறை ரகசியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோவ்டெனுக்குத் தஞ்சம் அளித்தமை என்பன இம்முறை ரஷ்ய அதிபர் புட்டின் முதலிடத்தைப் பிடிக்க வழி வகுத்திருக்கலாம் எனக் கருதப் படுகின்றது. மறுபுறம் அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்ததற்கும் எட்வர்ட் ஸ்னோவ்டெனின் விவகாரம் முக்கிய காரணியாக இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

இம்முறை சுமார் 72 உலகத் தலைவர்களைப் பரீசிலித்த போர்ப்ஸ் பத்திரிகை வெறுமனே 9 பெண்களின் பெயர்களையே உள்ளடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதேவேளை இப்பட்டியலில் 3 ஆவது இடத்தில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் உம், 4 ஆவது இடத்தில் போப் பிரான்ஸிஸும் 5 ஆவது இடத்தில் ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கெலும் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to உலகில் செல்வாக்கு மிகுந்த நபராக ரஷ்ய அதிபர் புட்டின் தேர்வு:ஒபாமாவுக்கு 2 ஆம் இடம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com