பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளராக 2003 இல் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் நியமனம் பெற்று அன்று முதல் அதன் பொறுப்பாளராகச் செயற்பட்டவர் கேணல்.பரிதி அவர்கள்.
தேசியத் தலைவர் அவர்களின் நெறிப்படுத்தலினால் தனது பொறுப்பை உறுதியுடன் மேற்கொண்டார். தேசியத்தையும் தேசியத் தலைவரையும் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் நேசித்த உறுதிமிக்க செயற்பாட்டாளர்களை இணைத்துச் செயற்பட்டார்.
இவர் கண்ணியமானவர், நேர்மையுள்ளவர், இரக்க சிந்தனையாளர், இலட்சியவாதி, தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் எண்ணங்களுக்கும் சிந்தனைக்கும் செயல்வடிவம் கொடுத்தவர். இவரது பசுமையான நெஞ்சத்தில் பற்றி எரிந்து கொண்டிருந்த விடுதலை வேட்கையை நாம் அறிவோம். இவர் உண்மையாக இறந்துவிடவில்லை. வரலாற்றின் உயிர் மூச்சாக எம்முடன் தொடர்ந்து வாழ்கின்றார். தேசவிடுதலைச் செயற்பாட்டாளர்களாக இருப்பவர்கள் தமது செயற்பாட்டில் இருக்கும் போது அவர்களுக்கு எந்தப் புறத்தாக்கமும் ஏற்படக்கூடாது என்ற ஒரே எண்ணங்கொண்டு, அவர்கள் நலன்கள் அனைத்திலும் கண்ணும் கருத்துமாக இருந்து சோர்வற்றுச் செயற்படும் ஒரு சமூக ஆர்வலன் இவர் என்பதற்கு இருவேறு கருத்து இருக்கமுடியாது.
தாயகத்தில் ஒரு சிறந்த போராளியாக அதற்குரிய சிறப்பம்சங்களையும் கொண்டிருந்தமையினால் நிர்வாகக் கட்டமைப்பை மிகத் திறனுடன் கொண்டு சென்றார் என்றால் மிகையாகாது. பிரான்சின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கீழ் இயங்கும் தமிழர் நலன் சார்ந்த தமிழர் கலைபண்பாட்டுக்கழகம், தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு அதனுடன் இயங்குகின்ற தமிழ்ச்சோலைப் பள்ளிகள், தமிழ்ப் பெண்கள் அமைப்பு, தமிழர் விளையாட்டுத்துறை, இளையோர் அமைப்பு உள்ளிட்ட அனைத்து உப கட்டமைப்புக்களையும் சீரமைத்து பிரான்சின் சட்டதிட்டங்களுக்கு அமைவாகப் பதிவு செய்து சிறந்த நிர்வாகக் கட்டமைப்புக்களைக் கொண்டதாக ஒருங்கிணைத்து அதன் மூலமாகத் தமிழர் நலன் சார்ந்த அனைத்து நிகழ்வுகளையும் மேற்கொண்டதோடு மட்டுமல்லாதது, எமது நியாயமான அபிலாசைகளைச் சனநாயரீதியில், முன்னெடுத்துச் செல்லத் தமிழீழ மக்கள் பேரவை என்கின்ற அரசியல் கட்டமைப்பை உருவாக்கி இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கமைய பதிவு செய்து நினைத்துப்பார்க்க முடியாத அரசியல் முன்னெடுப்புகளையும், எமது விடுதலைப் போராட்டத்திற்க்கான நியாயமான பரப்புரைகளையும் செய்வித்திருந்தார்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை மிகச் சிறந்ததோர் ஆலவிருட்சமாக உருவாக்கிப் பிரான்சு வாழ் சுமார் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்களை ஒன்றிணைத்தார். இதன்மூலம் தாயகத்தில் காலாண்டு காலமாக நடைபெற்ற தாயக விடுதலைப் போராட்டத்திற்குத் தேவையான அனைத்து அடிப்படை, அவசரத் தேவைகளை நிறைவாகவும் ஆரோக்கியமாகவும் செய்து கொண்டிருந்த பெருமை இவரையே சாரும்.
இவ்வாறான நிலையில்தான் 2006ல் சிறிலங்கா மற்றும் ஏனைய பல நாடுகளின் சூழ்ச்சியினால் புலிகள் பயங்கரவாத இயக்கம் என்று ஐரோப்பிய ஒன்றியத்தினால் அறிவிக்கப்பட்டது. இதற்கு அமெரிக்காவில் இடம்பெற்ற இரட்டைக் கோபுரத் தாக்குதலும் காரணமாக அமைந்தது. இதனைச் செய்த பயங்கரவாத அமைப்புக்களினால், உண்மையான விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் பாதிக்கப்பட்டது. இதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சர்வதேசத்தில் பாரிய நெருக்கடிகளுக்கும் அழுத்தங்களுக்கும் இன்றுவரை முகம் கொடுத்து வருகின்றமை மிகப்பெரிய துரதிர்ஸ்டமே.
இவ்வாறானதொரு நெருக்கடியான காலகட்டத்தில் 01.04.2007 ம் திகதியில் மனிதநேய செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்டனர். இதனால் பிரான்சில் ஈழத்தமிழர்கள் மிகவும் கோபமும் அதிர்ச்சியும் அடைந்தனர். நீதி, நியாயம், விடுதலை என்பவற்றிற்கு போராடும் மேற்குலக நாடுகளில் பிரான்சு தனித்துவம் வாய்ந்தது. விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் என்ற மகுட வாக்கியத்தைக் கொண்டதும் மனிதநேயம், நாகரிகம் என்பவற்றைக் கொண்டதுமான பிரான்சு தேசம் இவ்வாறு நடந்து கொண்டமை அனைத்துத் தமிழர்களாலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக அமைந்தது ஆனால் கைது செய்யப்பட்ட பொறுப்பாளர் பரிதி உட்பட்ட அனைத்துச் செயற்பாட்டாளர்களும் பிரான்சின் நீதித்துறை கொடுத்த தீர்ப்பினை ஏற்று பின்னர் தொடர்ந்து தமது சட்டத்துறை அனுசரணையாளர் மூலம் தாம் நியாயமானவர்கள், நிரபராதிகள் என்பதை வாதிட்டே வந்தனர். இருந்தும் தமது உரியகாலத்தை சிறையில் கழித்தே வந்தனர். அவர்களில் சிலர், ஒதுங்கிய போதும் விடுதலையான மறுநாளே உறுதியுடன் தனது தாயக விடுதலைச் செயற்பாட்டினைத் துல்லியமான முறையில் தன்னுடன் விடுதலையான ஏனையவர்களுடன் இணைந்து பரிதி முன்னெடுத்தார்.
2009 மே 18 எமது தாயக விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில், உலகத் தமிழ் மக்கள் தாங்கொணாத் துயருடன், விழிநீர் சிந்தி இருந்தவேளை எமது உறவுகள் உச்ச அளவில் சிறிலங்காவினதும் ஏனைய சர்வதேச வல்லமை மிக்க வல்லரசுகள் உட்பட இருபதிற்கு மேற்பட்ட நாடுகளினதும் சூழ்ச்சியினால் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் புலம்பெயர் நாடுகளில் எமது போராட்டம் வலுப்பெறவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து செயற்படத் தொடங்கினார்.
ஜெனீவா நோக்கிய TGV தொடரூந்து, ஐரோப்பிய ஒன்றித்தில் மாநாடு, நினைவுச் சின்னகள் நிறுவியமை, அஞ்சல் முத்திரைகள் வெளியிட்டமை போன்றவை முக்கியமையானவைகள் ஒருபுறமும், தாயகத்திலிருந்து வந்த போராளிகள் மற்றும் குடும்பங்கள், காயப்பட்ட போராளிகளின் நலனிலும், தாயகத்தில் உதவியற்று நிற்கும் எமது மக்களுக்கு உதவும் பணியிலும் மனித நேயப்பணியாளர்களின் கூட்டமைப்பின் மூலம் உதவி செய்து வந்துள்ளார்.
அவரின் இதயத்தில் நிறைவாக இருந்த அந்த நோக்கம் இன்று வரை அவர் உருவாக்கியவர்களால் தொடரப்பட்டு வருகின்றது. இதனால் தான் இவரது செயற்பாடுகள், சிறிலங்கா அரசிற்கு பெரும் சீற்றத்தை உண்டு பண்ணியது. எமது நியாயமான போராட்டத்தை பிரான்சு அரசாங்கத்திற்கு புரியவைக்க இளையோரையும், தமிழீழ மக்கள் பேரவையையும் ஈடுபடவைத்து இன்று பிரான்சு பாராளுமன்றத்தில் எமது ஈழப்பிரச்சினை தொடர்பான விடயங்களைக் கையாள ஓர் உறவை ஏற்படுத்தியவர்.
புலம்பெயர் மண்ணில் சோர்வுடன் இருந்த மக்களுக்கு உறுதியையும் பலத்தையும் கொடுத்தவர்.சிறைசென்று திரும்பிய பின்னரும் தனது பொறுப்பை ஏற்று மீண்டும் உறுதியுடன் தனது தேச விடுதலைப் பணியைத் தொய்வின்றித் தொடர்ந்தவர். இவரது இச் செயல் கண்டு வியந்து, ஒதுங்கியிருந்த அநேகமானோர் முன்வந்து முகம் காட்டி தேசவிடுதலையை முன்னெடுத்தனர். இதனால் எதிரி ஆனவன் விழிப்படைந்தான். ஏனெனில் தாயகத்தில் விடுதலைப் போராட்டத்தை முடித்துவிட்டோம், அழித்துவிட்டோம் என்று எக்காளமிட்டவன் அதிர்ந்துபோனான்.
புலம்பெயர் மண்ணில் எமது விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரை நோக்கித் தனது திட்டங்களை வரைந்து அந்த நிகழ்ச்சித் திட்டத்தை நிறைவேற்ற இரண்டகர்களைத் தமக்குத் துணையாக்கினான். இதன் ஓர் அங்கமே கடந்த 30.10.2011 ஆம் திகதி தனது பணிமனையில் இருந்து வீடு செல்லும் வேளை, துரோகிகளால் பரிதி பாரிய வாள்வெட்டுக்கு உள்ளாக்கப்பட்டார். தனது திறமையினால் முடிந்தவரை தடுத்து அதில் இருந்து தப்பித்துக்கொண்டார். இதுமட்டுமல்ல, இவர் தாயகத்திலும் எதிரியின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இலக்காகி சிகிச்சையின் மூலம் உயிர்தப்பினார். இவரது அனைத்து ஆற்றல் திறமைகளை, இவருடன் நன்கு பழகுபவர்களுக்கே நன்றாகத் தெரியும்.
எல்லாவற்றுக்கும் மேலாக இவரது திறமையை எதிரியானவன் நன்கு அறிந்திருந்தான் என்பதே உண்மை. இதனால் தான் பரிதியின் நடமாட்டத்தை நன்கே நிழல் போல் தொடர்ந்து தனது நிகழ்ச்சி நிரலுக்குச் சந்தர்ப்பம் பார்த்திருந்தான். உண்மையில் தமிழினத்துக்கு ஒளிகொடுக்கின்ற பகலவன் போல் நிலைமைகளைப் புரிந்து தருணத்துக்கு ஏற்ற முடிவை எடுக்கின்ற மதியை உடைய மதீந்திரனாகவே செயற்பட்டான் பரிதி. எம் மாவீரர்களின் மாதத்தில் மாண்புடன் வீரமரணத்தைத் தழுவிக்கொண்டார்.
ஆம், தன்தேச விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்த ஒப்பற்ற ஒரு விடுதலை வீரன் நயவஞ்சகத்தனமாகக் காட்டு மிராண்டித்தனமாக, அநாகரிகமாக, கோரத்தனமாகக் கொல்லப்பட்டமை அனைத்துலகத் தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்கும், துயரத்திற்கும், வேதனைக்கும், கோபத்திற்கும் உள்ளாக்கியது. இச் செய்தி காட்டுத்தீ போல் பிரான்சு உட்பட அனைத்து நாடுகளிலும் பரவியது. அனைத்துலகரீதியில் மக்கள் வெள்ளம் அலையெனப் பாரிசு நகரை நோக்கியது. இது எதனைக் காட்டியதென்றால் பரிதியின் தேச விடுதலைப் பணிக்கும் அவரது தியாகத்திற்கும் அற்பணிப்புக்கும் கிடைத்த அங்கீகாரத்தைக்காட்டியது. இதைக் கண்டு பிரெஞ்சு தேசம் வியந்தது.
ஆனாலும் இழக்க முடியாத ஓர் உன்னத உயிரினை நாம் இழந்து போய் நிற்கின்றோம். எமது போராட்டத்தின் நியாயத்திற்காகப் பல்வேறு அனுசரணைகளை வழங்கி வந்த பிரான்சு தேசம் கேணல் பரிதி அவர்களின் படுகொலைக்கு உரிய குற்றவாளியைக் கைதுசெய்து நீதி மன்றத்தில் நிறுத்தவில்லையே என்கின்ற ஆதங்கத்தையும், கவலையையும் நம்பிக்கையீனத்தையும் அனைத்துத் தமிழ் மக்களின் நெஞ்சங்களிலும் ஏற்படுத்தியுள்ளன. இதே போலவே கடந்த 1996ல் பிரான்சில் படுகொலை செய்யப்பட்ட லெப்.கேணல் நாதன் கப்டன் கஐன் ஆகியோரின் படுகொலைகள் கிடப்பில் போடப்பட்டது போன்று இதுவும் ஆகிவிடக்கூடாது என்பதே அனைவரின் விருப்பமாகும்.
கேணல் பரிதி அவர்களைச் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அறிந்து கொண்டவர்கள் இவரின் இழப்பைத் தனியே ஒரு சாவு என்கின்ற வரையறைக்குள் அடக்கிவிட முடியாது. இது ஓர் ஒட்டுமொத்தமான இனத்திற்கு ஏற்பட்ட இழப்பென்றே சொல்ல வேண்டும். அவரோடு வாழ்ந்தவர்கள், வளர்ந்தவர்கள், பழகியவர்கள், உறவாடியவர்கள், பயன் பெற்றவர்கள், என்று எல்லோருமாகியவர்கள் தான் நாங்கள். அவர் உயிருடன் வாழும் போது அவரைப்புரிந்து கொள்ளாதவர்கள் கூட இன்று அவர் உயிர் பிரிந்த பின்புதான் அவரின் இழப்பைப் பற்றிப்போசுகின்றனர்.
அன்பான தமிழீழ மக்களே!
பிரான்சு நாட்டின் மனிதநேய அமைப்புகளினதும், விடுதலை அமைப்புகளினதும் அரசியல் இராஐதந்திரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய எங்கள் மாவீரன் கேணல்பரிதி அவர்களின் ஓராண்டு நினைவாக 08.11.2013 அன்று (வெள்ளிக்கிழமை) பேரணி ஊர்வலம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரான்சின் நீதி மன்றத்திற்கு அண்மையிலும் அதி முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்றான சென்மிசேல் பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ள எமது பேரணி ஊர்வலம் பிரதான வழியினூடாகச் சென்று பிரெஞ்சுப் பாராளுமன்றம் முன்பாக நிறைவடையும். பின்னர் கேணல் பரிதி அவர்களின் ஒராண்டு நினைவாக மலர் ஒன்றும், பாடல் இறுவெட்டு ஒன்றும் வெளியிட்டு வைக்கப்படும்.
கேணல் பரிதியினதும், மற்றும் லெப். கேணல் நாதன், கப்டன் கஐன் ஆகியோரின் படுகொலைக்கு நீதி கேட்டும், அத்துடன் சிறிலங்கா அரசானது மாபெரும் தமிழினப்படுகொலையை நடாத்திவிட்டு இன்னும் தொடர்ச்சியாக எமது மக்களைக் கொடுங்கோண்மை ஆட்சிக்குள் அடிமைப் படுத்திக்கொண்டு, சர்வதேச நாடுகளுக்குத் தன்னைச் சனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் ஒரு நாடாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் வகையில் நவம்பர் மாதம் நடாத்தவிருக்கும் கொமன்வெல்த் மாநாட்டிற்குச் செல்லாது கனடா புறக்கணித்தது போன்று பிரித்தானியாவும் மற்றைய நாடுகளும் புறக்கணிக்க வேண்டும் எனக்கேட்டும் ஐரோப்பிய மக்களையும் இணைத்துப் பிரான்சின் அனைத்துக் கட்டமைப்புகளும் முன்னெடுக்கும் நீதிக்கான பேரணியில் அனைத்துத் தமிழ்மக்களும் கேணல் பரிதியை நெஞ்சில் சுமந்து குடும்பங்களாக, சொந்தங்களாக, ஊர்மக்களாக, நண்பர்களாக, தொழிலாளர்களாக இணைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
அத்துடன் எமது நியாயமான கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் வகையில் எம்மால் முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போடும் செயற்பாட்டில் தாங்கள் முன் வந்து தங்கள் கையெழுத்துகளைப் போடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தாயகத்தில் கொடிய இராணுவ அடக்கு முறைக்கு மத்தியிலும் நடந்து முடிந்த வடமாகாணத் தேர்தலில் தமிழீழ மக்கள் தமது உறுதியான நிலைப்பாட்டினைச் சிங்கள தேசத்திற்கும், சர்வதேசத்துக்கும் தெட்டத்தெளிவாகத் தெரியப்படுத்தியுள்ளனர்.
அவ்வாறே பிரான்சில் நடைபெறவுள்ள இந்தப் பேரணியும் மற்றும் பிரித்தானியாவிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் நடைபெறுகின்ற தமிழீழ மக்களின் போராட்டங்களும் தாயக விடுதலையில் புலம் பெயர் வாழ் தமிழீழ மக்களின் ஒன்றிணைந்த உறுதியான நிலைப்பாட்டையே எடுத்துக்காட்டுவதாக அமைகின்றன.
தாய் நாட்டின் விடுதலையை வென்றெடுக்கத் தயங்காது ஒன்றிணைவோம் !!!
'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு

0 Responses to புலம்பெயர் மண்ணில் சோர்வுடன் இருந்த மக்களுக்கு உறுதியையும் பலத்தையும் கொடுத்தவர் கேணல் பரிதி