தூத்துக்குடிக்கு வந்த அமெரிக்க கப்பலில் இருந்த வெளிநாட்டவர்களை, கியூ பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்த ஜாமீன் மனுவை 30ம் திகதிக்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.
அமெரிக்காவில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து இருந்த கப்பலில் நவீன ஆயுதங்கள் இருந்ததால், இந்திய கடலோர காவல் படையினர் இவர்களை பிடித்து வைத்து கியூ பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கியூ பிரிவு போலீசார் இவர்களை விசாரித்து, பின்னர் கைது செய்து பாளையம் கோட்டை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தங்கள் மீதான விசாரணை முடிவடைந்து விட்ட நிலையில் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று,
தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். ஆனால், விசாரணையின் போது, இவர்கள் மீதான விசாரணை இன்னமும் முடியாத பட்சத்தில் இவர்களை ஜாமீனில் விடக் கூடாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.
கைதிகளின் சார்பில் டெல்லி வழக்கறிஞர் வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மனுவின் மீதான விசாரணையை வருகிற 30ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to அமெரிக்க கப்பலில் கைதாகியோர் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!