Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டெல்லி சட்டசபை தேர்தலில் தேமுதிக போட்டியிடுகிறது. இது தொடர்பாக டெல்லி தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள நேற்று விஜயகாந்த் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி ஜந்தர்மந்தரில் இன்று காலையில் தே.மு.தி.க. பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘‘தலைநகர் டெல்லியில் சுதந்திரத்துக்கு முன்பே தமிழர்கள் குடியேறி வாழ்ந்து வருகிறார்கள். தற்போது 15 லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை உங்களுக்காக குரல் கொடுக்க விஜயகாந்த் காத்திருக்கிறார்’’ என்று குறிப்பிட்டார்.

விஜயகாந்த் பேசியபோது,   ‘’நாங்கள் ஓட்டுக்காக அல்ல. மக்கள் பிரச்சனைக்காக என்றும் குரல் கொடுப் போம். டெல்லியில் வாழ்கின்ற தமிழர்கள் இந்தியும் பேசுகிறீர்கள். எனக்கு தமிழ் மட்டும் தான் தெரியும். எனது பேச்சில் உண்மை இருக்கும்.

அன்னை மொழி காப்போம். அனைத்து மொழியும் காப்போம் என்பது தான் எனது கொள்கை. டெல்லியில் வாழ்கின்ற தமிழர்களுக்காக இன்று மட்டும் அல்ல என்றுமே குரல் கொடுப்பவன் நான். உங்கள் பிரச்சினை களுக்காக தே.மு.தி.க. தொடர்ந்து குரல் கொடுக்கும்’’ என்றார்.

0 Responses to எனக்கு தமிழ் மட்டும் தான் தெரியும் : டெல்லி பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பேச்சு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com