Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மோதல்களை முடிவுக்கு கொண்டுவந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம், நாட்டு மக்களின் அபிவிருத்தியை இலக்காக கொண்டு சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு முன்னோக்கி செல்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மோதல்கள் முடிவடைந்துவிட்டது.

நாட்டில் எங்கேயும் குண்டுகள் வெடிக்கவில்லை. அத்துமீறலான செயற்பாடுகள் இடம்பெறவில்லை. நாட்டில் சுமுகமான நிலை நிலவுகின்றது.

ஆனால் இதைப்பற்றி யாருமே பேசுவது கிடையாது. மாறாக அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்தி தொடர்பிலேயே முரணான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். எனினும் மக்கள் இது தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும். தற்போது நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களால் நேரடியாக கண்டுகொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு - கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலையை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் திறந்து வைத்த பின், அங்கு இடம்பெற்ற நிகழ்வில் பேசும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார். முப்பது ஆண்டுகளாக மோதல்களினால் பாதிக்கப்பட்டிருந்த நாட்டை மூன்று ஆண்டுகளில் அபிவிருத்தி நோக்கி கொண்டு வந்துள்ளோம். இது, வெற்றிகரமான முயற்சி. உலகில் வேறெங்கிலும் இவ்வாறான அபிவிருத்தியைக் காண முடியாது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to அபிவிருத்திக்கான சவால்களை வெற்றிகரமாக எதிர் கொண்டுள்ளோம்: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com