இலங்கையிலுள்ள தமிழர்கள், குறிப்பாக வடக்கு மாகாணத்திலுள்ள தமிழர்கள் இந்தியாவிடமிருந்து பெரியளவிலான எதிர்பார்ப்பை கொண்டிருக்கிறார்கள்.
அவ்வாறான தருணத்தில் அவர்களின் பின்னால் நிற்பது இந்தியாவின் தலையாய கடமை என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்வதை எதிர்க்கும் தமிழக அரசியற்கட்சிகள், வடக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள் குறித்து சிந்திக்க வேண்டும். அவர்கள் எவற்றை அடைய முயற்சிக்கிறார்களோ, அதற்கு இந்தியா உதவ வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கெடுக்குமா இல்லையா என்ற சந்தேகங்கள் நீடித்துவரும் நிலையில் புதுடில்லியில் ஊடகவியலாளர்களிடம் பேசியபோது சல்மான் குர்ஷித் மேற்கண்டவாறு கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பில் பிரதமர் மன்மோகன் சிங் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஆனால், வெளிவிவகார அமைச்சரான நான் உத்தியோகபூர்வமாக பங்கேற்கிறேன். அத்தோடு, வெளிவிவகார அமைச்சர்களின் செயலாளர்கள் மாநாட்டில் இந்திய வெளிவிவகார செயலாளர் சுஜாதா சிங்கும் பங்கெடுப்பார். அதுவே இப்போதைக்கு எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இலங்கை தமிழர்கள் இந்தியாவிடம் பெரிய எதிர்பார்ப்பை கொண்டுள்ளனர் : சல்மான் குர்ஷித்