Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை மிகப் பெரிய மயான பூமி என சனல் 4 தொலைக்காட்சி நேற்றிரவு பிரசாரங்களை ஆரம்பித்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.

இந்த மயான பூமியில் விடுமுறையை கழிப்பதை தவிர்த்து கொள்ளுமாறு அந்த தொலைக்காட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்பட இயக்குனர் கெலும் மக்ரே உட்பட அவரது குழுவினருக்கு வட பகுதிக்கு செல்ல இடமளிக்காததால் அந்த தொலைக்காட்சி இப்படியான பிரசாரத்தை ஆரம்பித்துள்ளதாக  குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை வட பகுதிக்கு சென்ற பிரித்தானியாவின் ஐ.ரி.வி. தொலைக்காட்சி கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டதாக அறிக்கையொன்றை ஒளிப்பரப்பியுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு நேற்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் சென்றிருந்த போது அவரை காண காட்டிய அதே அக்கறையை பொதுமக்கள் சனல் 4 ஊடகத்தினர் மீதும் காட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில சந்தர்ப்பங்களில் சனல் 4 விடம் தமது பிரச்சினையை கூறினால் அது பிரித்தானிய பிரதமருக்கு உரியவகையில் தெரியப்படுத்தப்படும் என்று நம்பிக்கையை அவர்கள் வெளிக்காட்டினர்.

காணாமல் போனவர்களின் உறவுகள் சார்பில் எவ்வித மகஜர்களையும் பிரித்தானிய பிரதமரிடம் நேரடியாக கொடுக்கமுடியவில்லை.

இதற்கான காரணம் அவரின் பாதுகாப்பு கருதியதாக அமைந்திருந்தது.

பாரிய அலையிலான மக்களை கெமரோன் சந்திப்பது கெமரோனின் பாதுகாப்பு அதிகாரிகளை பொறுத்தவரை சாத்தியமானதாக இருக்கவில்லை.

இதன்போது கெமரோனின் சார்பில் சனல் 4 ஊடகவியலாளர்களிடம் தமது மனுக்களையும் காணாமல் போனோரின் தகவல்களையும் அவர்களின் உறவுகள் கையளித்தனர்.

0 Responses to பிரித்தானிய பிரதமருக்கு நிகராக சனல் 4 ஐ நம்பும் யாழ்ப்பாண மக்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com