Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

CHOGM மாநாட்டை புறக்கணிக்கக் கோரும் ஆர்பாட்டங்கள் உலகளாவிய ரீதியில் வெள்ளிக்கிழமை 15 நவம்பர், தாயகம், தமிழகம் மற்றும் புலம் வாழ் தமிழ் மக்கள் வாழும் நாடுகளில்   இடம்பெற்றன.

இலண்டனிலும், பிரித்தானியத் தமிழர் பேரவையினரின் ஏற்பாட்டில், பொதுநலவாய செயலகத்தின் (Marlborough House ) முன்னால் பல நூற்றுக்கணக்கான பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் கலந்து கொண்டு, பிரித்தானிய பிரதமரின் இலங்கை  விஜத்தினைக் கண்டித்ததுடன், அடுத்த இரண்டு வருடங்களுக்கு பொதுநலவாய நாடுகளின் தலைமைத்துவத்தை போர் குற்றவாளி  ராஜபக்சே ஏற்பதை எதிர்த்தும் கோசங்கள் எழுப்பினர்.

மேற்குறிக்கப்பட்ட ஆர்பாட்டத்தில் மேலும் சில முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன:





-இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்பை விசாரிக்க சர்வதேச சுயாதீன விசாரணைக்குழு அமைத்தல் 
-தமிழரின் பூர்விக நிலங்கள் பறிமுதல் செய்யப்படுவதை நிறுத்துதல்
-தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை பேணுதல்


யாழ்ப்பாணம் சென்ற பிரதமர் கமரூன் அங்குள்ள உண்மையான கள நிலவரங்களை அறிய முற்படாததும்,பாதிக்கப்பட்ட மக்களுடன் நேரடி சந்திப்புகளை மேற்கொள்ளாததும் குறிப்பிடத்தக்கது.
 
BBC , சேனல் 4, அல்ஜாசிர, Reuters  உட்பட பத்திற்கு மேற்பட்ட  சர்வதேச ஊடகங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்தமையும், இனவாத இலங்கையரசினால் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு,  அண்மையில் தாயகத்திலிருந்து தப்பி வந்த தமிழ் மக்கள் சிலரையும் இவ்நிகழ்வில் செவ்வி எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.




0 Responses to CHOGM மாநாடுக்கெதிரான பிரித்தானிய தமிழர் பேரவையினரின் தொடர் போராட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com