பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனிடம் மற்றுமொரு முறை சிங்கள அரசாங்கத்துக்கு ஆதரவாக முன்னாள் கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரன் கருத்துக்களை கூறியுள்ளார்.
சிறீலங்கா வந்துள்ள கெமரூன் இன்று காலை முத்தையா முரளிதரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதன் போது, வடமாகாணத்தில் சிறந்த சூழ்நிலை காணப்படுவதாகவும், மிக சிறந்த அபிவிருத்திகள் இடம்பெறுவதாகவும் முரளிதரன் கெமரூனிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் டேவிட் கெமரூன் சில தமிழ் அமைப்புகளில் இலங்கை தொடர்பில் பிழையாக வழி நடத்தப்பட்டுள்ளதாகவும், பிரதமர் கெமரூன் இலங்கை தொடர்பில் போதுமான அறிவின்றி, கருத்துக்களை வெளியிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில் யுத்த வளையத்துக்கு சென்று அதனை பார்வையிட்டு, அதனுடைய தன்மைகளை புரிந்துக் கொள்ள முடியாது என்றும், தற்போது யுத்தம் நிறைவடைந்த பின்னர் மக்கள் நிம்மதியாக வாழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் வடக்கில் தமிழ் மக்களுக்கு தற்போது எந்த பிரச்சினையும் இல்லை என்றும் தாம் பிரதமரிடம் தெரிவித்தாக, அங்கில ஊடகம் ஒன்றுக்கு முரளிதரன் செவ்வி வழங்கியுள்ளார்.

0 Responses to கெமரூனிடம் மகிந்த அரசாங்கத்திற்கு வக்காளத்து வாங்கும் முத்தையா முரளிதரன்