பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ள பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணியவில் மேற்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட தரப்பினரைச் சந்தித்து பேசியுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு சென்ற பிரித்தானியப் பிரதமருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் யாழ் பொது நூலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது, வடக்கின் தற்போதைய நிலைமைகள் மற்றும் மோதல்களுக்கு பின்னரான விடயங்கள், அரசியல் பிரச்சினைகள் பற்றி பேசப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
குறித்த சந்திப்பில் கலந்து கொண்ட பின்னர், 1948ஆம் ஆண்டிற்குப் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வெளிநாடொன்றில் அரச தலைவர் ஒருவர் விஜயம் செய்வது இதுவே முதன்முறை என்று தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் டேவிட் கமரூன் எழுதியுள்ளார்.
இதனிடையே, பிரித்தானியப் பிரதமரின் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் நல்லூரில் காணாமற்போனவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று காலை முதல் முன்னெடுத்தனர். அத்தோடு, அவர் யாழ் பொதுநூலகத்துக்கு வருகை தந்த போதும் மக்கள் அவரிடம் கோரிக்கைகளை முன்வைக்க முனைந்தனர். ஆனாலும், பொலிஸார் மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை.
யாழ்ப்பாணத்தின் உள்ளுர் ஊடகவியலாளர்களை சந்திக்கும் திட்டமொன்று பிரித்தானியப் பிரதமரிடம் இருந்ததாகவும், ஆனாலும் அதற்கான சூழல் அங்கு காணப்படவில்லை என்று தெரிகிறது.

0 Responses to பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் யாழ் விஜயம்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் சந்திப்பு