Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வலி.வடக்கு இடம்பெயர்ந்த மக்களிற்கு மாற்றிடம் வழங்கி குடியேற்றுவதை முற்றாக நிராகரிப்பதாக வலி.வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்விற்கான அமைப்பு அறிவித்துள்ளது.ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வலி.வடக்கு நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் 30 இற்கும் அதிகமான முகாம்களினில் வாழ்ந்து வருகின்றனர்.அவர்களை காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் கைவிடப்பட்ட கற்குவாரி பகுதிகளினில் குடியமர்த்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது.இதனை ஏற்றுக்கொண்டால் என்றுமே வலி.வடக்கு நிலப்பரப்பு படையினரிற்கு கைமாறிப்போவதை தடுக்கவும் முடியாதென தெரிவித்தார் அவ்வமைப்பின் தலைவரான சணமுகலிங்கம் சஜீவன்.

இன்று யாழ்.ஊடக அமையத்தினில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டினில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் அரசினது மாற்றுக்காணி திட்டத்தை முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்தார்.

இதனிடையே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனது திட்டமிட்ட ஏமாற்று வேலைகளினாலேயே இடம்பெயர்ந்த மக்கள் தமது கோரிக்கைகளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரிட்டிஸ் பிரதமரிடம் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவித்தார்.

யாழ்.பொதுசன நூலகம் முன்னதாக நடைபெற்ற காணாமல் போனோரது போராட்டமே வலி.வடக்கு போராட்டகாரர்களை பிரிட்டிஸ் பிரதமர் கண்டு கொள்ளாமைக்கு காரணமென சுமந்திரன் கூறி திரிவதையும் அவர் வன்மையாக கண்டித்தார்.சுமந்திரனிற்கு நன்கு தெரியும் எக்காரணம் கொண்டும் இடம்பெயர்ந்த மக்கள் போராட்டத்தை பார்வையிட பிரிட்டிஸ் பிரதமர் வரமாட்டாரென்பது.ஆனாலும் நாங்கள் பொதுசன நூலகத்திற்கு வருகை தருவதை தவிர்க்க அங்கு கமருணை அழைத்து வருவதாக கடைசி நிமிடம் வரை கூறிக்கொண்டிருந்தார்.ஆகக்குறைந்தது இடம்பெயர்ந்த மக்கள் தத்தமது முகாம்களினிலிருந்தேனும் கமருனை சந்திக்கும் வாய்ப்பினை அவர் திட்டமிட்டு சிதைத்து விட்டதாகவும் சஜீவன் குற்றஞ்சாட்டினாhர்.

இதனிடையே வலி.வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்விற்காக போராடிவரும் எமது அமைப்பினை சிதைக்க சதி முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளது.அவ்வகையினில் போலி அமைப்பொன்றை சிலர் ஏற்படுத்த அவர்கள் முற்பட்டுள்ளனர்.கூட்டமைப்பு நாடாளுமன்ற  உறுப்பினர்கள் ஒரு சிலர் இத்தகைய சதி முயற்சியினில் தமது சுயநல அரசியல் இலாபம் கருதி செயற்படுவதாகவும் சஜீவன் மேலும் தெரிவித்திருந்தார்.அவர்கள் போராடும் மக்கள் வலுவை சிதைக்க முற்படுவார்கள்.ஆனாலும் எமது அமைப்பு தொடர்ந்தும் வலி.வடக்கு நில விடுதலைக்காக போராடுமென அவர் மேலும் தெரிவித்தார்.

0 Responses to தொடர்ந்து போராடுவோம்! சுமந்திரன் துரோகம் செய்துவிட்டார் - வலி.வடக்கு மக்கள்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com