Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் இடம்பெற்றுவரும் பொதுநலவாய மாநாட்டினை மலேசியா புறக்கணிக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் மலேசியத் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மலேசிய மனித உரிமை ஆர்வலர்கள், எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள், தமிழர் சமூக அரசியல் பிரமுகர்கள் இக்கோரிக்கையினை மலேசிய அரசுக்கு முன்வைத்திருந்தனர். 140க்கும் மேற்பட்ட மலேசிய அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கையொன்றினையும் ஏலவே விடுத்திருந்தன.

இதனொரு அங்கமாக தலைநகர் கோலாலம்பூரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதுணையுடன் தமிழர் முன்னேற்ற இயக்கம் அமைப்பானது கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளது.

பொதுநலவாய நாடுகள் மாநாட்டுக்கு தமிழகத்தில் எழுந்திருக்கும் நிலைப்பாடுகளை சுட்டிக்காட்டி, ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையில் உள்நாட்டு நிலைமை காத்திரமான பாத்திரத்தை ஆற்ற முடியும் என்பதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்திருந்தார்.

ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் கொண்டுவந்திருந்த தீர்மானத்தில் மலேசியா வாக்களிக்காமல் ஒதுங்கி கொண்டிருந்தமைக்கு உள்நாட்டில் எழுந்த நிலைப்பாடுகள் பிரதான காரணமாக அமைந்திருந்தன.

தனது குடிமக்களில் பத்து வீதத்தினை கொண்டுள்ள மொரீசியஸ் நாட்டில் பிரதமர் இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டினை புறக்கணித்திருந்தார்.

இந்நிலையில் உலகத் தமிழர்கள் தங்கள் நாடுகளில் ஈழத்தமிழர் விவகாரத்தில் முன்னெடுக்கின்ற செயற்பாடுகள் அந்தந்த ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு காத்திரமான பங்கினை ஆற்றி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

0 Responses to பொதுநலவாய மாநாட்டினை புறக்கணி: மலேசியத் தமிழர்கள் போராட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com