Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கார்த்திகைக் காந்தள் - கவிபாஸ்கர்

பதிந்தவர்: தம்பியன் 25 November 2013

உப்புக் கண்ணீர்
ஈரத்தில்..
குருதிக் காயாத
கறையோடு
முள்ளிவாய்க்காலில்
மூடப்பட்ட.. எம்
உறவின்
எலும்புக் கூடுகளின்
வழியாய்..
எழும்புகிறது
எம் மாவீரர்களைப் போலவே
காந்தள் பூ!

இன அழிப்பில்
இறந்த காந்தள்
மாவீரர் நாளில்
முட்டி முளைத்து
நிமிர்கிறது..
விடுதலை திறப்பின்
அடையாளமாய்!

கார்த்திகைப்
பனிச்சாரலிலும்
முற்றத்து ஓரங்களிலும்
முன்னிலும்
பெரிதாய் சுடர் விடுகிறது
தமிழீழம் நோக்கிய
காந்தள்!

உலகில்
வாசனை பரப்பவே
பூத்த பிற பூவெல்லாம்
தலைகுனிந்தது…
தன் மண்ணை வணங்க
தலை நிமிரும்
காந்தள் பூவைக் கண்டு
“மாவீரர் நாளில்!”

0 Responses to கார்த்திகைக் காந்தள் - கவிபாஸ்கர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com